இதுகளும் சதி பண்ணுதே.. அரசுத் தேர்வு எழுத வந்த பெண்ணின் HALL TICKET-ஐ தூக்கிச் சென்ற பருந்து - வீடியோ
- பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அந்த பருந்து வசதியாக அமர்ந்துகொண்டது.
- கீழே திரண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சலுக்கு மத்தியிலும், பருந்து அசையாமல் இருந்தது.
கேரளாவில் அரசு ஊழியர் துறைத் தேர்வில், செம்பருந்து பறவை தேர்வரின் ஹால்டிக்கெட்டை தூக்கிச் சென்ற விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது.
கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று அரசு ஊழியர் துறைத் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு முன் காலை 7.20 மணியளவில் தேர்வறைக்கு வெளியே படித்துக்கொண்டிருந்த பெண் தேர்வரிடம் இருந்து ஹால்டிக்கெட்டை பருந்து பறித்துப் கொண்டு பறந்தது.
ஹால்டிக்கெட்டை பிடித்தபடி பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அந்த பருந்து வசதியாக அமர்ந்துகொண்டது.
கீழே திரண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சலுக்கு மத்தியிலும், பருந்து அசையாமல் இருந்து, ஹால்டிக்கெட்டை பல நிமிடங்கள் பிடித்துக் கொண்டிருந்தது.
இருப்பினும் தேர்வு தொடங்கும் முன் அந்த பருந்து இறுதியில் ஹால்டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது. இதனால் அந்த பெண் தேர்வர் குறித்த நேரத்தில் தேர்வு எழுத முடிந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.