இந்தியா
LIVE

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-03 07:44 IST   |   Update On 2023-12-03 19:53:00 IST
2023-12-03 09:09 GMT

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றதை காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மற்றும் கட்சித் தலைவர்கள் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கொண்டாடினர்.

2023-12-03 08:59 GMT

கேசிஆர் மற்றும் கேடி ராமராவுக்கு மக்கள் பதில் அளித்துள்ளனர்.... தேர்தல் முடிவு குறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.

2023-12-03 08:57 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நாட்டு மக்கள் தங்கள் மனநிலையை இந்த தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளோம். எங்கள் திட்டங்களை மக்கள் ஆதரித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நன்றி. கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, கட்சித் தொண்டர்கள், மாநில மக்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படுவதால் இங்கு வளர்ச்சி வேகமாக நடக்கும்” என்றார்.

2023-12-03 08:45 GMT

காங்கிரஸ் வேட்பாளர் முகமது அசாருதீன் 10 சுற்றுகள் முடிவில் 1,648 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி, இதுவரை மொத்தம் 25,923 வாக்குகள் பெற்றுள்ளார்.

2023-12-03 08:41 GMT

மத்திய பிரதேசத்தில் கட்சி அமோக வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், கட்சி தொண்டர்களிடம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசினார். அப்போது, "வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்..." என்று கூறினார்.

2023-12-03 08:36 GMT

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

2023-12-03 08:31 GMT

4 மாநில தேர்தல் முடிவு குறித்து பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில், "தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம்... 2024 தேர்தல் முடிவுகள் இதைவிட சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்" என கூறினார்.

2023-12-03 08:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் 2 மணி நிலவரப்படி பாஜக-55, காங்கிரஸ்- 32, மற்றவை-3 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 08:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் 2 மணி நிலவரப்படி பாஜக-112, காங்கிரஸ்-71, மற்றவை-16 ஆகிய இடங்களில் முன்னிலை.

2023-12-03 08:29 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் 2 மணி நிலவரப்படி பாஜக-161, காங்கிரஸ்- 66, மற்றவை-3 ஆகிய இடங்களில் முன்னிலை.

Tags:    

Similar News