இந்தியா
null
LIVE

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-03 02:14 GMT   |   Update On 2023-12-03 14:23 GMT
  • நான்கு 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

2023-12-03 14:23 GMT

2024 பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் முடிவுசெய்துவிட்டார்கள் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

2023-12-03 14:01 GMT

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி 60-க்கு மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை கவர்னர் ஏற்றுள்ளார் என கவர்னரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

2023-12-03 13:53 GMT

தெலுங்கானாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்ட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.

2023-12-03 13:35 GMT

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் டெல்லியில் கட்சி அலுவலகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

2023-12-03 13:32 GMT

தெலுங்கானாவின் கமாரெட்டி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி 6,741 வாக்கு வித்தியாசத்தில் முதல் மந்திரி கே.சி.ஆரையும், 11,736 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவந்த் ரெட்டியையும் தோற்கடித்தார்.

2023-12-03 13:16 GMT

ராஜஸ்தானில் பா.ஜ.க. 100-க்கு மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, முதல் மந்திரி அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம் வழங்கினார்.

2023-12-03 12:39 GMT

ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில் டெல்லி கட்சி அலுவலகம் வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

2023-12-03 12:25 GMT

3 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார். தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

2023-12-03 12:18 GMT

4 மாநில தேர்தல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். தெலுங்கானா மக்களுக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

2023-12-03 12:10 GMT

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக டி.ஜி.பி. அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News