இந்தியா
LIVE

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-03 07:44 IST   |   Update On 2023-12-03 19:53:00 IST
2023-12-03 11:50 GMT

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 1,64,951 வாக்குகள் பெற்றார்.

2023-12-03 11:39 GMT

பா.ஜ.க. வெற்றி குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் தளத்தில், சாதி அரசியலின் நாட்கள் முடிந்துவிட்டன என்பதை இன்றைய தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மக்கள் வழங்கிய இந்த மகத்தான ஆதரவிற்காக தலைவணங்குகிறேன். பாரதிய ஜனதா கட்சியின் இந்த மாபெரும் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

2023-12-03 11:24 GMT

தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், தெலுங்கானா மக்களுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க.வுக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. பா.ஜ.க. வளர முயற்சி எடுத்த தொண்டர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

2023-12-03 11:14 GMT

3 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளத்தில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களின் நம்பிக்கை பா.ஜ.க. மீது உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த அனைத்து மாநிலங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் நமது இளம் வாக்காளர்கள், பா.ஜ.க. மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

2023-12-03 11:10 GMT

ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் கூறுகையில், ராஜஸ்தான் மக்கள் அளித்த ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இது எதிர்பாராத முடிவு. நமது திட்டங்கள், சட்டங்கள் மற்றும் புதுமைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் நாம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதையே இந்த தோல்வி காட்டுகிறது. புதிய அரசு அமைய வாழ்த்துகள். ஓபிஎஸ், சிரஞ்சீவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ராஜஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

2023-12-03 11:03 GMT

தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாழ்த்து தெரிவித்த கே.டி.ராமாராவுக்கு நன்றி. ஆட்சியில் அவருடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளீர்கள். எதிர்கட்சியினரின் கருத்துகளை நாங்கள் மதிப்போம் என தெரிவித்தார்.

2023-12-03 10:54 GMT

ராஜஸ்தானின் வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. எம்.பி.யான தியா குமாரி 1,58,516 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இவர் 71,368 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

2023-12-03 10:46 GMT

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில், "தெலுங்கானா மக்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஆதவுக்கு நன்றி. சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று மாநிலங்களிலும் எங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாநிலங்களில் புத்துயிர் பெறுவோம் என உறுதி அளிக்கிறோம். தற்காலிக பின்னடைவுகளைச் சமாளித்து, இந்தியாக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்துவோம் என கூறியுள்ளார்.

2023-12-03 10:32 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் 4 மணி நிலவரப்படி பாஜக-54, காங்கிரஸ்- 34, மற்றவை-2 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 10:32 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் 4 மணி நிலவரப்படி பாஜக-116, காங்கிரஸ்-68, மற்றவை-15 ஆகிய இடங்களில் முன்னிலை.

Tags:    

Similar News