ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் 4 மணி நிலவரப்படி பாஜக-168, காங்கிரஸ்- 61, மற்றவை-1 ஆகிய இடங்களில் முன்னிலை.
4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 4 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 63, பிஎஸ்ஆர் -39, பாஜக -10, மற்றவை-7 ஆகிய இடங்களில் முன்னிலை.
பிஆர்எஸ்-ஐ தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ய வைத்த தெலுங்கானா மக்களுக்கு நன்றி. இன்று கிடைத்த முடிவைப் பற்றி வருத்தப்படவில்லை, ஆனால் இது எங்களுக்கு ஏமாற்றமே. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்" என கேடிஆர் ராவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தானின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. வேட்பாளருமான வசுந்தரா ராஜே 1,38,831 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளரைவிட 53193 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் 3 மணி நிலவரப்படி பாஜக-54, காங்கிரஸ்- 33, மற்றவை-3 ஆகிய இடங்களில் முன்னிலை
4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் 3 மணி நிலவரப்படி பாஜக-116, காங்கிரஸ்-68, மற்றவை-15 ஆகிய இடங்களில் முன்னிலை.
4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் 3 மணி நிலவரப்படி பாஜக-160, காங்கிரஸ்- 68, மற்றவை-2 ஆகிய இடங்களில் முன்னிலை.
4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 64, பிஎஸ்ஆர் -40, பாஜக -7, மற்றவை-8 ஆகிய இடங்களில் முன்னிலை.
ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#WATCH | Security tightened outside Telangana Congress chief Revanth Reddy's residence in Hyderabad. pic.twitter.com/CHA2k0Slcn
— ANI (@ANI) December 3, 2023
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பாஜக தலைவர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
#WATCH | BJP leaders Smriti Irani, Ravi Shankar Prasad and Anil Baluni at the party headquarters in Delhi as BJP registers comfortable lead in Rajasthan, Chhattisgarh and Madhya Pradesh pic.twitter.com/Kf2ktYhymz
— ANI (@ANI) December 3, 2023