ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 2 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 63, பிஎஸ்ஆர் -41, பாஜக -7, மற்றவை-8 ஆகிய இடங்களில் முன்னிலை.
தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
#WATCH | Telangana DGP Anjani Kumar and other Police officials meet state Congress president Revanth Reddy at his residence in Hyderabad.
— ANI (@ANI) December 3, 2023
The party is leading on 65 of the total 119 seats in the state, ruling BRS is leading on 38 seats. pic.twitter.com/m6A9llRzgO
சத்தீஸ்கர் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஓம் மாத்தூரும், மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்கு புறப்படுகின்றனர்.
வெற்றி கொண்டாட்டத்தில் பாரதிய ஜனதாவினர்...
#WATCH | Union minister & BJP leader Jyotiraditya Scindia and party leaders celebrate as the party leads in #MadhyaPradeshElection2023 pic.twitter.com/iDfxkNawph
— ANI (@ANI) December 3, 2023
#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan and Union Minister and BJP leader Ashwini Vaishnaw exchange sweets as the party leads in #MadhyaPradeshElection2023 pic.twitter.com/H2zbIatcn5
— ANI (@ANI) December 3, 2023
4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், "தெலுங்கானாவில் நாங்கள் முன்னிலையில் உள்ளோம். சத்தீஸ்கரில் மாறுபாடுகள் உள்ளன. சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கணக்கு இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் கடுமையான சண்டை இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். முழுமையான முடிவு கிடைக்கவில்லை. காத்திருந்து பார்ப்போம்" என்றார்.
4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஷெஜாத் பூனவல்லா கூறுகையில், ‘இது மோடியின் மந்திரம், மக்கள் மோடியின் உத்தரவாதத்தை ஏற்று காங்கிரஸின் போலி உத்தரவாதத்தை நிராகரித்து விட்டனர் என்பது தெளிவாகிறது’ என்றார்.
#WATCH | On the election results, BJP leader Shehzad Poonawalla says, "It clearly means that it is Modi's magic and people have accepted Modi's guarantee and rejected the fake guarantee of Congress..." pic.twitter.com/Z1rtDIvD1H
— ANI (@ANI) December 3, 2023
4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் 1 மணி நிலவரப்படி பாஜக-53, காங்கிரஸ்- 36, மற்றவை-1 ஆகிய இடங்களில் முன்னிலை
4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் 1 மணி நிலவரப்படி பாஜக-115, காங்கிரஸ்-69, மற்றவை-15 ஆகிய இடங்களில் முன்னிலை.
4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி பாஜக-165, காங்கிரஸ்- 63, மற்றவை-2 ஆகிய இடங்களில் முன்னிலை.
4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 1 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 62, பிஎஸ்ஆர் -42, பாஜக -9, மற்றவை-6 ஆகிய இடங்களில் முன்னிலை.