இந்தியா
LIVE

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-03 07:44 IST   |   Update On 2023-12-03 19:53:00 IST
2023-12-03 07:24 GMT

தெலுங்கானா சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக காரில் பேரணி சென்றார் ரேவந்த் ரெட்டி.

2023-12-03 07:13 GMT

மத்திய பிரதேச தேர்தல்: மாநில காங்கிரஸ் தலைவரும், சிந்த்வாரா தொகுதி வேட்பாளருமான கமல்நாத் 9 சுற்றுகள் முடிவில் 15,623 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார், இதுவரை மொத்தம் 57,895 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2023-12-03 07:09 GMT

மத்திய பிரதேச தேர்தல்: சிவ்ராஜ் சிங் சவுகான் 8 சுற்றுகள் முடிவில் 50,996 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். இதுவரை மொத்தம் 70,453 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2023-12-03 06:47 GMT

தெலுங்கானா மாநிலத் தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் பின்தங்கிய நிலையில் ஐதராபாத்தில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகம் வெறிச்சோடி உள்ளது. முதல்வரும், கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் தற்போது முதல்வர் இல்லத்தில் இருக்கிறார்.

2023-12-03 06:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் 12 மணி நிலவரப்படி பாஜக-51, காங்கிரஸ்- 36, மற்றவை-3 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 06:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் 12 மணி நிலவரப்படி பாஜக-114, காங்கிரஸ்-64, மற்றவை-21 ஆகிய இடங்களில் முன்னிலை.

2023-12-03 06:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் 12 மணி நிலவரப்படி பாஜக-156, காங்கிரஸ்- 69, மற்றவை-5 ஆகிய இடங்களில் முன்னிலை.

2023-12-03 06:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 67, பிஎஸ்ஆர் -40, பாஜக -8, மற்றவை-4 ஆகிய இடங்களில் முன்னிலை.

2023-12-03 06:24 GMT

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களான பிஎஸ் ஹூடா, முகுல் வாஸ்னிக் மற்றும் ஷகில் கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்தனர். தேர்தல் முடிவுகள் குறித்து வாஸ்னிக் கூறுகையில், "இவை முன்னனி நிலவரம் தான். முடிவுகள் வெளிவரட்டும்" என்றார்.

2023-12-03 06:02 GMT

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News