இந்தியா
LIVE

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-03 07:44 IST   |   Update On 2023-12-03 19:53:00 IST
2023-12-03 06:00 GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 100 இடங்கள் தேவை என்ற நிலையில் 106-ல் முன்னிலை வகிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.


2023-12-03 05:55 GMT

மத்தியப் பிரதேசம்: மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது, அதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்...”என்றார்.

2023-12-03 05:48 GMT

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலத் தேர்தல்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, பாஜகவினர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடினர்.

2023-12-03 05:44 GMT

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போபாலில் உள்ள ஸ்மார்ட் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.

2023-12-03 05:38 GMT

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் முன்னிலை.

2023-12-03 05:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 44, பாஜக-41, மற்றவை-2 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 05:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் காலை 11 மணி நிலவரப்படி பாஜக-104, காங்கிரஸ்-72, மற்றவை-23 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 05:29 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி பாஜக-156, காங்கிரஸ்- 71 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 05:29 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 70, பிஎஸ்ஆர் -37, பாஜக -8 ஆகிய இடங்களில் முன்னிலை.

2023-12-03 05:16 GMT

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வெளியே பாஜக தொண்டர்கள் மேளம் அடித்தும் நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News