செய்திகள்

ம.பி. சட்டசபை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக

Published On 2018-11-17 07:03 GMT   |   Update On 2018-11-17 07:03 GMT
மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை இன்று வெளியானது. #BJPreleaseparty #MPAssemblyelections
போபால்:

230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

வாக்குப்பதிவுக்கு சுமார் 10 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில்  நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தனர்.


இந்நிலையில், பா.ஜ.க.வின் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை இன்று வெளியானது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
#BJPreleaseparty #MPAssemblyelections
Tags:    

Similar News