நவராத்திரி ஸ்பெஷல்

நவராத்திரி பண்டிகை உருவான வரலாறு

Published On 2025-09-21 14:22 IST   |   Update On 2025-09-21 14:22:00 IST
  • அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார்.
  • ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.

எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.

இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

வரம் பெற்ற பிறகு, இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். மகிஷாசுரனின் ஒழுக்கமற்ற செயல்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்தனர்.

அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார். தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் "மகிசாசுரவர்த்தினி" (அல்லது மகிஷாசுரமர்த்தினி) என்று சக்தியைப் போற்றினார்கள்.

இந்த ஒன்பது நாட்கள் துர்கா தேவி மகிசாசூரனை எதிர்த்து போராடிய நாட்களே 'நவராத்திரி'யாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News