குழந்தை பராமரிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்...

Published On 2023-03-20 02:58 GMT   |   Update On 2023-03-20 02:58 GMT
  • கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
  • தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

* தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

* தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

* தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

* தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.

* இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.

* தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.

* தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.

* தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.

* கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.

* இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

* அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

* வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.

மலர்விழி, பெங்களூரு.

Tags:    

Similar News