குழந்தை பராமரிப்பு

கோடை வெயில்... குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

Published On 2024-05-09 06:53 GMT   |   Update On 2024-05-09 06:53 GMT
  • இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை கொடுக்கலாம்.
  • கடுமையான வெயில் நேரத்தில் வெளியே விளையாக அனுமதிக்க வேண்டாம்.

சிறு குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பதே பெற்றோருக்கு ஒரு சவாலான காரியம் தான். எனினும் கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாப்பது என்பது இன்னும் கடினமானது.

பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

* குழந்தைகள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பார்கள் என்று காத்திருக்காமல், அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

* வெறும் தண்ணீர் மட்டும் குடிக்க சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனால் இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை கொடுக்கலாம்.

* கடுமையான வெயில் நேரத்தில் வெளியே விளையாக அனுமதிக்க வேண்டாம். நாமும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லாமல் இருப்பது நல்லது.

* அப்படி வெளியே செல்லும்போது, தொப்பி, சன்ஸ்கிரீன், சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு லேசான, பருத்தி உடைகளை அணிவிக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு சத்தான உணவாக கொடுக்க வேண்டும். 

* பழங்கள், காய்கறிகள், சூப்கள், தயிர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும். வறுத்த, எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப நோய்கள், சூரிய ஒளியின் தாக்கம் பற்றி கூற வேண்டும்.

* குழந்தைகளை வெயில் நேரத்தில் வெளியில் விளையாடுவதை தவிர்க்க, குழுவாக சேர்ந்து ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை கேட்பது, வீட்டிற்குள் விளையாடுவது என்று பழக்கலாம்.

Tags:    

Similar News