கிரிக்கெட்

டோனி, கோலி, ரோகித், ரெய்னா.. யாரும் படைக்காத சாதனையை படைத்த சாம்சன்

Published On 2024-05-08 12:16 GMT   |   Update On 2024-05-08 12:16 GMT
  • டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
  • இதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் குறைந்த ஐபிஎல் போட்டியில் 200 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் டோனி இருந்தார். அவர் 165 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை சாம்சன் முறியடித்துள்ளார். இவர் 159 போட்டிகளிலே 200 சிக்சர்களை விளாசி அசத்தி உள்ளார்.

இந்த வரிசையில் விராட் கோலி 180 போட்டிகளிலும் ரோகித் 185 போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளிலும் 200 சிக்சர்களை விளாசி உள்ளனர்.

Tags:    

Similar News