கிரிக்கெட் (Cricket)

'பாகிஸ்தானுடன் விளையாட தயாராக இருக்கிறோம்' - சூர்யகுமார் யாதவ்

Published On 2026-02-05 17:33 IST   |   Update On 2026-02-05 17:33:00 IST
  • பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடமாட்டோம் என நாங்கள் கூறவில்லை.
  • பிப்ரவரி 15 அன்று கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி நடைபெறுகிறது

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் விளையாட பாதுகாப்பு காரணங்களால் மறுப்பு தெரிவித்த வங்கதேச அணிக்கு ஆதரவாகவும், அந்த அணியை நீக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு எதிராகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இது வாரியத்தின் முடிவு என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும்,அரசின் உத்தரவை ஏற்போம் என்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,

"பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடமாட்டோம் என நாங்கள் கூறவில்லை. அவர்கள்தான் கூறினார்கள். ஐசிசி அட்டவணையை உருவாக்கியது. நாங்கள் விளையாட தயாராக இருக்கிறோம். நாங்கள் கொழும்பிவிற்கு செல்வதற்காக பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. டெல்லிக்குப் பிறகு நாங்கள் கொழும்பு செல்கிறோம்." என தெரிவித்துள்ளார். 

பிப்ரவரி 15 அன்று கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்குமா என தெரியவில்லை. ஆனால் மற்ற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News