கிரிக்கெட் (Cricket)
VIDEO: கப்பு முக்கியம் பிகிலு... ஆடவர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய மகளிர் அணி
- 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.
- நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்திய ஆடவர் அணிக்கு இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
அதில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்திருந்தனர்.