கிரிக்கெட்

ஐபிஎல் 2024: பெங்களூரு ஆடவர் அணியை ஆதரிக்க வந்த பெங்களூரு மகளிர் அணி

Published On 2024-05-18 14:48 GMT   |   Update On 2024-05-18 14:48 GMT
  • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
  • இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியை காண பெண்கள் பிரீமியர் லீக் கோப்பை வென்ற RCB மகளிர் அணியை சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா, ஷ்ரேயாங்கா பாட்டீல் உள்ளிட்ட பல வீராங்கனைகள் வருகை தந்துள்ளனர்.

பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

Tags:    

Similar News