கிரிக்கெட்

இந்திய அணி கோச் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல்.ராகுல் சொன்னது என்ன?

Published On 2024-05-24 05:49 GMT   |   Update On 2024-05-24 05:49 GMT
  • இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
  • ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்

டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

 

நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

 

Tags:    

Similar News