கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வே-க்கு எதிரான போட்டிக்கு முன் சென்னை கோவிலில் இந்திய வீரர்கள் சாமி தரிசனம்

Published On 2026-02-25 15:26 IST   |   Update On 2026-02-25 15:26:00 IST
  • சென்னை சேப்பாக்கத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
  • இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், நாளை (பிப். 26) நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி சரியாக இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி கிட்டத்தட்ட 100 ரன்கள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும்.

இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன், இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் அக்சர் படேல் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இருவரும் கோவிலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News