கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன்: ஹாரி புரூக் சாதனை
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 164 ரன்கள் சேர்த்தது.
பல்லேகலே:
டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 98 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.