கிரிக்கெட்

அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவார் - சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

Published On 2024-05-23 11:03 GMT   |   Update On 2024-05-23 11:03 GMT
  • இந்த ஐ.பி.எல் தொடரில் 14 ஆட்டங்களில் ஆடிய டோனி 161 ரன்களை எடுத்துள்ளார்.
  • அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் டோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் இதுவரை டோனியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

அதில், "எனக்கு அது தெரியாது. இதற்கான பதில் எம்.எஸ்.டோனிக்கு மட்டும் தான் தெரியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் மரியாதை தருவோம். அவர் சம்பந்தமான முடிவுகளை எப்போதும் அவர் தான் எடுப்பார். சரியான சந்தர்ப்பங்களில் அந்த முடிவுகளை அவர் தெரிவிப்பார். ஆனால் அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் என்னுடைய விருப்பமும் ரசிகர்களின் விருப்பமும் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News