கிரிக்கெட் (Cricket)
null

IPL 2026 | உன்னையெல்லாம் நான் மிஸ் பண்ணவே இல்ல: தீபக் சஹாரை பங்கமாக கலாய்த்த தோனி

Published On 2026-03-13 10:56 IST   |   Update On 2026-03-13 10:56:00 IST
  • ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது.
  • சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர் மற்றும் முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனி ஆகியோர் இடையே சில செல்ல சண்டைகள் களத்தில் அரங்கேறியுள்ளது. சாஹரை வம்பிலுப்பதை அடிக்கடி தோனி செய்து வந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

அதிக முறை தோனியிடம் சாஹர் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார். பல நகைச்சுவையான வீடியோக்களும் இதில் அடங்கும். அந்த வகையில் களத்தில் மட்டும் இல்லாமல் வாட்ஸ் அப் சேட்டிலும் இவர்களது செல்ல சண்டை விட்டு வைக்கவில்லை.

அவர்கள் இருவருக்கும் இடையிலான நகைச்சுவையான உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், "மஹி பாய், உங்கள் பழைய வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன்" என்று தீபக் சாஹர் கூறியுள்ளார்.

அதற்கு தனது பாணியில் பதிலளித்த தோனி, "சரி.. ஆனால் நான் உன்னை கொஞ்சம் கூட மிஸ் பண்ணவில்லை" என பதில் அளித்தார்.

இருந்தாலும் விடாத தீபக் சாஹர், "சரி, நான் உங்களை நேரில் வந்து பார்க்கப் போகிறேன்" எனக் கூற, அதற்கு தோனி "நீ வரவே வேண்டாம்" என கலாய்த்துள்ளார்.

தோனிக்கும் தீபக் சாஹருக்கும் இடையிலான இந்த வாட்ஸ் அப் சேட் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

சாஹரை கலாய்ப்பதை விட தோனிக்கு வேறு எந்த வேலையும் பிடித்தமானதாக இருக்காது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News