கிரிக்கெட் (Cricket)

IPL 2026 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து விலகிய முசாரபானி

Published On 2026-03-13 19:59 IST   |   Update On 2026-03-13 19:59:00 IST
  • முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்ட நிலையில், முசாரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இவர் டி20 உலகக் கோப்பையில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் இடம் பிடித்திருந்தார். வங்கதேசத்தில் இந்தியர்கள் தாக்கப்பட்டனர். இதனால் முஸ்தாபிஜுர் ரகுமானை ஏலம் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்பினர் குரல் எழுப்பினர்.

இதனால் முஸ்தாபிஜுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்தது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணியின் பிளெசிங் முசாரபானியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News