BCCI | ராகுல் டிராவிட், மிதாலி ராஜை கவுரவிக்கும் பிசிசிஐ
- சுப்மன் கில்லுக்கு ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது வழங்க இருக்கிறது.
- ஆகிப் நபிக்கு மாதவ்ராவ் சிந்தியா விருது வழங்கப்பட இருக்கிறது.
பி.சி.சி.ஐ. ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதனடிப்படையில் வருகிற 15-ந்தேதி (நாளைமறுதினம்) 2026-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழா டெல்லியில் நடைபெற இருக்கிறது.
இதில் ராகுல் டிராவிட், ரோஜர் பின்னி, மிதாலி ராஜ் ஆகியோருக்கு மதிப்பிற்குரிய சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறது.
ரஞ்சி டிராபி வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தது. அதற்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் நபி முக்கிய காரணம். இவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வளர்ந்து வரும் வீரராக திகழ்ந்தார். இவருக்கு மாதவ்ராவ் சிந்தியா விருது வழங்க இருக்கிறது.
சுப்மன் கில்லுக்கு ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது வழங்க இருக்கிறது.
சிறந்த சர்வதேச கிரிக்கெட்டர் விருது ஆண்கள் மற்றும் பெண்கள் அணியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
சிறந்த சர்வதேச அறிமுக வீரர் மற்றும் வீராங்கனை விருது, உள்ளூர் தொடரில் சிறந்த ஆல்-ரவுண்டர் போன்ற விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.