search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • குற்றம் கடிதல் 2 படத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்குகிறார்.
    • படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

    திரைப்பட விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என பல்வேறு துறைகளில் இயங்கி வருபவர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார். இவர் 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற திரைப்படம் "குற்றம் கடிதல்."

    ஜே.எஸ்.கே. தயாரிப்பில் உருவான 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்குகிறார். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

     


    இந்த படம் குறித்து பேசிய ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், "கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

    'குற்றம் கடிதல் 2' படத்தின் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது. இதர நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • நடிகர் மோகன் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார்.
    • கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்தவர் நடிகர் மோகன். 1980-க்களில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர் மோகன், இடையே படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு "ஹரா" என்ற படத்தில் நடித்துள்ள மோகன், விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்திலும் நடித்துள்ளார். நடிகர் மோகன் இன்று (மே 9) பிறந்தநாள் கொண்டாடுகிறார். 

    இந்த நிலையில் நடிகர் மோகனுக்கு கோட் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

     


    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடிகர் விஜய், மோகன், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.
    • 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கிறது.

    பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர், ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார் என்ற இணைய தொடர் மூலம் ஓ.டி.டி. தளத்திற்கு அறிமுகமானார். இவர் இயக்கத்தில் உருவான "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" சீரிசில் சோனாக்ஷி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதித்தி ராவ் ஹைதாரி மற்றும் பலர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

    சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றிய கதையம்சம் கொண்ட தொடராக ஹீரமண்டி உருவாகி இருக்கிறது. விலை உயர்ந்த நகைகளில் துவங்கி, ஆடம்பர செட் என இந்த வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

     


    இந்த நிலையில், ஹீரமண்டி வெப் சீரிசில் பிரபலங்கள் வாங்கிய சம்பலம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஹீரமண்டி வெப் சீரிசில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஹீரமண்டி வெப் சீரிஸ் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ரூ. 60 இல் இருந்து ரூ. 70 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து சோனாக்ஷி சின்காவுக்கு ரூ. 2 கோடியும், மனிஷா கொய்ராலா மற்றும் ரிச்சா சத்தா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடியும், அதித்தி ராவுக்கு ரூ. 1.5 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதே போன்று சஞ்சிதா ஷேக் ரூ. 40 லட்சமும், ஷார்மின் சீகல் ரூ. 30 லட்சமும், வாலி முகமது ரூ. 75 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருடன் படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கருடன் திரைப்படம் மே மாதம் ரிலீசாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. எனினும், எந்த தேதியில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்படவில்லை. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

     


    கருடன் படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் கே. குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
    • திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

    வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். படத்தின் பாடலான எலக்சன் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 1 மில்லியன் பார்வையை இதுவரை பெற்றுள்ளது. திரைப்படம்  மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அதைதொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார். பாடலில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியது.
    • கொரோனா குமார் படம் தவிர மற்ற படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிலம்பரசன். இவர் தற்போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது சிம்புவின் 48 ஆவது திரைப்படம் ஆகும். இதுதவிர நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

    முன்னதாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுக்கு ரூ. 9 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாகவும், அதில் ரூ. 4 கோடி வரை முன்பணமாக சிம்புவுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த படத்தை இயக்குநர் கோகுல் இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. எனினும், முன்பணம் பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, கொரோனா குமார் படம் தவிர மற்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

     


    இதை எதிர்த்து வேல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் சிம்பு மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டுருந்தது.

    இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது. அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக் கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    கடந்த மாதம் படத்தில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

    அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    இத்திரைப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்டத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அப்து ரோசிக் எமிரேட்சை சேர்ந்த அமீரா என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.
    • அப்து ரோசிக் தனது வருங்கால மனைவிக்காக வாங்கிய வைர மோதிர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனில் பங்கேற்ற போட்டியாளரும் சமூக வலைதள பிரபலமுமான அப்து ரோசிக் (20), ஜூலை மாதம் 7-ந்தேதி திருமணம் செய்ய உள்ளார். அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், அப்து ரோசிக் எமிரேட்சை சேர்ந்த அமீரா (19) என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். திருமணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    அப்து ரோசிக் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது வருங்கால மனைவிக்காக வாங்கிய வைர மோதிர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    என் வாழ்க்கையில் நான் கற்பனை கூட செய்ததில்லை நான் இவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று. நான் தேடி கண்டுபிடித்துவிட்டேன் என்னை மதிக்கும் என் வாழ்க்கையை தடையாக பார்க்காத அன்பை கண்டுபிடித்து விட்டேன்.

    நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

    #காதல் #திருமணம் #நிச்சயதார்த்தம் #வாழ்க்கை #திருமணம் #காதல் #வாழ்க்கைத்துணை #நிச்சயதார்த்தம்

    என்று பதிவிட்டுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'.
    • இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார்.

    'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

    'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் வெற்றி பெற நடிகர் சிம்பு நேற்று அவரது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் ஸ்டார் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படம் தனது கனவுகளை துரத்திக் கொண்டு இருக்கும் அனைவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டார். சமீபத்தில் சிம்பு நடித்து கொண்டு இருக்கும் தக் லஃப் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
    • மௌன குரு, மகாமுனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சாந்த குமாரின் அடுத்த படைப்பாக ரசவாதி உருவாகியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் படங்கள் வெளிவந்தாலும்  சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனால் ரீரிலீஸ் திரைப்படங்களுக்கு மக்கள் அதிகம் செல்லத் தொடங்கினர். சமீபத்தில் வெளியான அரண்மனை-4 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதைத் தொடர்ந்து இன்று 4 படங்கள் திரைக்கு வந்துள்ளது.

     

    1.ஸ்டார்

    இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்து பின்னணியை வைத்துக் கொண்டு திரைத்துறையில் நடிகனாக சாதிக்க வேண்டும் என போராடும் இளைஞனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

    2. ரசவாதி

    மௌன குரு, மகாமுனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சாந்த குமாரின் அடுத்த படைப்பாக ரசவாதி உருவாகியுள்ளது. அர்ஜூன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசவாதி திரைப்படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    3. உயிர் தமிழுக்கு

    தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் அமீர், அதைத்தொடர்ந்து திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரத்திலும் மற்றும் முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடித்தார். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ஆதாம் பாவா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பொலிடிகல் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

     

    4. மாயவன் வேட்டை

    அறிமுக இயக்குனரான சிக்கல் ராஜேஷ் அவரே இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் மாயவன் வேட்டை. மூவிலயா பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். சிக்கல் ராஜேஷ் மற்றும் திவ்ய பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மாயவன் வேட்டை ஹாரர் திரைப்படமாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அபராஜிதடு' (அந்நியன்) பெயரில் வருகிற 17- ந்தேதி தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுகிறது.
    • இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்கிறார்.

    கடந்த 2005-ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் அந்நியன். இதில் பிரபல நடிகர் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் நடித்தனர். இப்படம் நகைச்சுவை, காதல், அதிரடி த்ரில்லர் படமாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூலை குவித்தது.

    இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் சார்பில் தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.




    இப்படம் ஓர் அப்பாவியான அம்பி சமூகத்தில் அன்றாட மக்கள் எதிர்கொள்ளும் சட்டத்திற்கு புறமான நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடுபவர். இதனால் அனைவரும் இவரை இகழ்ந்து கேலி, கிண்டகள் செய்து "ரூல்ஸ் ராமானுஜம்" என அழைத்தனர்.

    இவரது தொடர்ச்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்ளைகள் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இவருக்குள் "அந்நியன்" என்னும் ஒரு ஆக்ரோசமான குணாதியசம் கொண்டுள்ள பிரமை ஒன்று உருவாகிறது. இவரால் சமாளிக்க முடியாத நேரங்களில் அந்த அந்நியன் இவருக்குள் இருந்து வெளிவந்து போராடுகிறார்.

    சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகார பலத்தினால் தவறுகளை செய்து வரும் சில குற்றவாளிகளை அந்நியனாக மாறி கருட புராணத்தின் படி தண்டனைகளை அளித்து வருகிறார், அம்பி. இதனை காவல்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் மற்றும் சாரி (விவேக்) கொலைகளை பற்றி புலனாய்வு செய்து வருவார்கள்


     



    அம்பி ஒருதலையாக நந்தினியை (சதா) விரும்புகின்றார். எனினும் ஒரே சட்டம் சட்டம் என்று பேசும் அம்பியின் மனதளவில் வெறுக்கும் சதா, இவரை பிடிக்கவில்லை என அவமானப்படுத்த, இவருக்குள் மீண்டும் ரெமோ என்னும் ஒரு புதிய குணம் தோன்றுவது தான படத்தின் கதை.

    இந்நிலையில் தற்போது விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுகின்றன.இதே போன்று விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக 'அபராஜிதடு' (அந்நியன்) என்ற பெயரில் இப்படம் வருகிற மே 17- ந்தேதி தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட இருக்கிறது.

    இப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெலுங்கில் இதனை 'ரீ ரிலீஸ்' செய்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
    • பிரேமலதா விஜயகாந்த் பத்ம விருதை பெற்றுக் கொண்டார்.

    டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அந்த வகையில், இன்று (மே 9) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வாழ்த்து செய்தயில், "என் நண்பன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும், அவருக்கும் மிகவும் பிடித்தமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளை கூறி அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.

    இதே போன்று நடிகர் பிரபு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "என் அன்பு சகோதரர் கேப்டனுக்கு விருது, என் இனிய நண்பர் கேப்டனுக்கு விருது. பத்ம பூஷன் விருதை கேப்டனுக்கு கொடுத்ததில் எங்க திரையுலகம் மிகவும் சந்தோஷம் அடைகிறோம். எங்களது அன்னை இல்லம் சார்பில் அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான புரட்சி கலைஞரோட விசிறிகளுக்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள். கேப்டன் என்றைக்கும் எங்க மனுசல வாழ்ந்துட்டு இருக்காறு. கேப்டன் விஜயகாந்துக்கு இந்த விருதை அளித்த மத்திய அரசுக்கு மிகப்பெரிய நன்றி," என்று தெரிவித்தார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×