என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ. 4 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது.
ரியல்மி நிறுவனம் வருடாந்திர விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த விற்பனை நாளை (டிசம்பர் 26) துவங்கி டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ரியல்மி ஸ்மார்ட்போன் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.
ரியல்மி சி சீரிஸ், நார்சோ சீரிஸ், ரியல்மி ஜி.டி. நியோ 2 5ஜி போன்ற மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. தள்ளுபடி ரூ. 500-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையின் போது ரியல்மி ஜி.டி. நியோ 2 5ஜி மாடலின் 8 ஜி.பி. + 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ. 31,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் 12 ஜி.பி. + 256 ஜி.பி. ரூ. 35,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி ஜி.டி. மாஸ்டர் எடிஷனுக்கு ரூ. 4 ஆயி்ரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 6 ஜி.பி. + 256 ஜி.பி. ரூ. 25,999-க்கு கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. + 128 ஜி.பி. ரூ. 27,999 விலைக்கு கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் 8 ஜி.பி. + 256 ஜி.பி. ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி 8 ஜி.பி. + 128 ஜி.பி. மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 8எஸ் 8 ஜி.பி. + 128 ஜி.பி. ரூ. 19,999 விலைக்கு கிடைக்கிறது. ரியல்மி 8 6 ஜி.பி. + 128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரியல்மி போன்றே நார்சோ சீரிஸ் மாடல்களுக்கும் அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரஷ்யாவில் சட்டவிரோத தகவல்களை நீக்க தொடர்ந்து தாமதம் செய்துவந்ததால் மாஸ்கோ நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் ரஷ்யாவில் சட்டவிரோதம் என கருதப்படும் தகவல்களை நீக்க தொடர்ந்து தாமதம் செய்து வந்ததால், மாஸ்கோ நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் ரூபிள் இந்திய மதிப்பில் ரூ. 735 கோடி அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் ரொக்கம் சார்ந்து விதிக்கப்பட்டுள்ள முதல் அபராதம் இது ஆகும்.
நடவடிக்கை எடுக்கும் முன் நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கம் முதல் பலமுறை ரஷ்யா வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. எனினும், நிறுவனம் ஒன்றின் வருடாந்திர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை அபராதமாக விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு எத்தனை சதவீதம் அபராதம் விதித்துள்ளது என்பதை அறிவிக்கவில்லை. எனினும், அபராத தொகையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் படி கூகுள் நிறுவனத்திற்கு 8 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போதை பொருள் துஷ்பிரயோகத்தை விளம்பரப்படுத்தும் தகவல்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவுகளை நீக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
ஹானர் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹானர் பிராண்டு ஹானர் மேஜிக் வி பெயரில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக ஹானர் பிராண்டின் தாய் நிறுவனமான ஹூவாய் பி50 பாக்கெட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 4ஜி பிராசஸர் கொண்டிருந்தது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் மேஜிக் வி ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1.18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் வி மாடலில் டூயல்-ஸ்கிரீன் டிசைன், 8 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, வெளிப்புறத்தில் 6.5 இன்ச் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. அறிமுகமானதும் ஹூவாய் நிறுவனத்தை போன்றே ஒப்போ நிறுவனமும் பைண்ட் என் பெயரில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
விவோ நிறுவனம் வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்க்கப்பட்டது.
விவோ நிறுவனம் தனது வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. டீசரில் வி23 மாடலில் பிளாட் ஸ்கிரீன், மெட்டல் பிரேம் மற்றும் வ23 ப்ரோ மாடலில் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
வி23 ப்ரோ மாடலில் இரட்டை செல்ஃபி கேமராக்கள், மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. தோற்றத்தில் புதிய வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எஸ்12 மற்றும் எஸ்12 ப்ரோ போன்றே காட்சியளிக்கின்றன. விவோ வி23 ப்ரோ மாடலில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

புதிய வி23 சீரிஸ் இந்தியாவின் முதல் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த வசதி விவோ வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி மாடல்களின் சன்ஷைன் கோல்டு நிற வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் டிசோ பிராண்டை ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இது ரியல்மியின் முதல் துணை பிராண்டு ஆகும். டிசோ பிராண்டிங்கில் ஏற்கனவே பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
வயர்லெஸ் இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஹேர்-டிரையர், பியர்டு ட்ரிம்மர்களை டிசோ விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், டிசோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் டிசோ வாட்ச் ஆர் என அழைக்கப்பட இருக்கிறது.

புதிய டிசோ வாட்ச் ஆர் மாடல் வட்ட வடிவ டயல், ரோஸ் கோல்டு அல்லது மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வாட்ச் ஆர் மாடல் டிசோ பிராண்டின் ஐ.ஒ.டி. (இண்டர்நெட் ஆப் திங்ஸ்) பிரிவு சாதனங்களின் கீழ் அறிமுகமாகிறது.
டிசோ வாட்ச் ஆர் மாடலின் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்படும் டிசோ வாட்ச் 2 மற்றும் டிசோ வாட்ச் 2 ப்ரோ போன்ற மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகலாம்.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடலை மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த கேமிங் ஸ்மார்ட்போனின் 18 ஜி.பி. ரேம் வேரியண்ட் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் என அழைக்கப்படுகிறது. இதன் விற்பனை இதுவரை துவங்காமல் இருந்தது. தற்போது இதன் முதல் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர், 18 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 6.78 இன்ச் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் 18 ஜி.பி. + 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் மாடலில் 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் ரூ. 49 விலையில் புதிய சலுகையை அறிவிக்க இருக்கிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய வருடாந்திர சலுகைகளை வழங்க இருக்கிறது. அதன்படி ரூ. 499 மொபைல் சலுகையில் ஹெச்.டி. தர வீடியோக்களை ஒரு சாதனத்தில் பார்த்து ரசிக்க முடியும். மேலும் பழைய மாதாந்திர சலுகைகளையும் நீக்கியது.
தற்போது ரூ. 99 விலையில் புதிய மாதாந்திர சலுகையை அறிவிக்க இருக்கிறது. இந்த சலுகையும் அதே பலன்களை வழங்குகிறது. மேலும் கார்டு, பேடிஎம், போன்பெ மற்றும் யு.பி.ஐ. கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 50 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
முதல் மாதத்திற்கு இந்த கட்டணம் பொருந்தும். அதன்பின் கட்டணம் ரூ. 99 என மாறிவிடும். ஐ.பி.எல். அல்லது இதர கிரிக்கெட் தொடருக்காக மட்டும் ஹாட்ஸ்டார் சந்தா தேர்வு செய்வோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். மற்றப்படி ரூ. 499 விலையில் கிடைக்கும் வருடாந்திர சலுகை சிறப்பானதாக இருக்கும்.
சியோமி நிறுவனத்தின் 11ஐ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது 11ஐ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய 11ஐ சீரிசில் சியோமி 11ஐ மற்றும் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் என இரு மாடல்கள் அடங்கும்.
சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 100 சதவீதம் சார்ஜ் ஆக 15 நிமிடங்களே ஆகும். இரு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் மாத வாக்கில் சீன சந்தையில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் பெயரில் அறிமுகம் செய்யப்பட்து.
புது ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உணர்த்தும் டீசரில், புதிய மாடல்கள் பிளாக், கிரீன், பர்ப்பில் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதுதவிர எம்.ஐ. வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.
எல்.ஜி. நிறுவனம் 6ஜி வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரிசப்ஷன் சார்ந்து மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வெளியிட்டு உள்ளது.
எல்.ஜி. நிறுவனம் 2021 கொரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொருட்காட்சியில் பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்வு டிசம்பர் 22 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 24 வரை நடைபெறுகிறது. இதில் எல்.ஜி. நிறுவனம் 6ஜி வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரிசப்ஷன் பிரிவில் மேற்கொண்ட ஆய்வு பற்றிய விவரங்களை வெளியிட்டது.
இந்த நிகழ்வில் எல்.ஜி. நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோஃபர் ஆய்வு மையத்துடன் இணைந்து உருவாக்கிய 6ஜி-க்கான பவர் ஆம்ப்லிஃபையரை வெளியிடுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த பவர் ஆம்ப்லிஃபையர் கொண்டு எல்.ஜி. நிறுவனம் 6ஜி டெராஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் வயர்லெஸ் டேட்டாவை வெற்றிகரமாக டிரான்ஸ்மிட் செய்துகாட்டியது.

டெராஹெர்ட்ஸ் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் / ரிசப்ஷன் தொழில்நுட்பம் 100 ஜிகாஹெர்ட்ஸ் துவங்கி 10 டெராஹெர்ட்ஸ் வரையிலான பிரீக்வன்சி பேண்ட்களை பயன்படுத்துகிறது. இவை நொடிக்கு 1 டெராபிட் வேகத்தை வழங்கும் திறன் கொண்டவை ஆகும்.
இத்துடன் ஃபுல் டுப்லெக்ஸ் தொழில்நுட்பத்தை எல்.ஜி. அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஒரே பிரீக்வன்சி பேண்ட் பயன்படுத்தி தகவல்களை அனுப்பவும், பெறவும் செய்கிறது. 2029 வாக்கில் 6ஜி தொழில்நுட்பம் வணிக ரீதியில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இதற்கென 2019 ஆம் ஆண்டு எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. கே.ஏ.ஐ.எஸ்.டி. 6ஜி ஆய்வு மையத்தை அமைத்தது.
ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
ரியல்மி நிறுவனம் ஒருவழியாக தனது ஜி.டி.2 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. இது ரியல்மி நிறுவனத்தின் முதல் பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகமாகிறது.
முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ஜி.டி.2 ப்ரோ மாடலில் மூன்று புதிய அம்சங்கள் முதல் முறையாக ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பேப்பர் டெக் மாஸ்டர் டிசைன் கொண்டு உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த போனில் உலகிலேயே முதல்முறையாக பயோ-சார்ந்த பேக் கவர் வழங்கப்படுகிறது.

இத்துடன் 150 டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா, ஃபிஷ்-ஐ மோட், ஆண்டெனா அரே மேட்ரிக்ஸ் சிஸ்டம், உலகின் முதல் அல்ட்ரா-வைடு பேண்ட் ஆண்டெனா ஸ்விட்சிங் தொழில்நுட்பம், வைபை என்ஹான்சர், 360 டிகிரி என்.எப்.சி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ரியல்மி ஜி.டி. 2 ப்ரோ மாடலில் 6.8 இன்ச் 120 ஹெர்ட்ஸ் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் விலை 800 டாலர்களுக்கும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.
கூகுள் நிறுவனம் தனது ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் விற்பனையை திடீரென நிறுத்தி இருக்கிறது.
கூகுள் நிறுவனம் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை 2017 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஏப்ரல் 2018 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கூகுள் ஹோம் மினி விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் கூகுள் ஸ்டோர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கூகுள் ஸ்டோர் தளத்தில் ஹோம் மினி ஸ்பீக்கரை தேடும் போது, இனி எப்போதும் கிடைக்காது என காண்பிக்கிறது. மேலும் கூகுள் தேடல்களில் இந்த ஸ்பீக்கரை கூகுள் விற்பனை செய்வதை குறிக்கும் பதில்கள் எதுவும் பட்டியலிடப்படவில்லை. அந்த வகையில் கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும், இதனை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்ளலாம்.

இந்தியாவில் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் சால்க் நிற வேரியண்ட் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 2,745 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் சார்கோல் பிளாக் மற்றும் கோரல் நிற வேரியண்ட் விலை முறையே ரூ. 2,898 மற்றும் ரூ. 4,899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அதன் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் மாடல்களான ஒன்பிளஸ் 10 சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமாகிறது. இதுகுறித்த தகவலை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் தெரிவித்தார்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஜனவரியில் அறிமுகமாகும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், சரியான வெளியீட்டு தேதியை அவர் அறிவிக்கவில்லை. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் வளைந்த எல்.டி.பி.ஒ. அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 32 எம்.பி. செல்பி கேமரா, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்.பி. லென்ஸ், 3 எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஓ.எஸ். 12 வழங்கப்படும் என தெரிகிறது.






