என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- இன்ஸ்டா360 கோ 3 மாடலில் அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- இன்ஸ்டா360 கோ 3 ஆக்ஷன் கேமரா ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும்.
இன்ஸ்டா360 நிறுவனத்தின் புதிய கோ 3 ஆக்ஷன் கேமரா அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கோ 2 மாடலை விட மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த புதிய வெர்ஷன் ஆகும். புதிய இன்ஸ்டா360 கோ 3 மாடலின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆக்ஷன் பாட் (Action Pod) ஆகும். இதில் ப்ளிப் செய்யக்கூடிய டச் ஸ்கிரீன் உள்ளது.
வெறும் 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய இன்ஸ்டா360 கோ 3 மாடல் அளவில் மிகவும் கச்சிதமாக இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டா360 கோ 3 மாடலில் அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள கேமரா f2.2 அப்ரேச்சர், 11.24mm ஃபோக்கல் லென்த் கொண்டிருக்கிறது. இவை பல்வேறு ரெசல்யூஷன் மற்றும் ஃபார்மேட்களில் (INSP, DNG போட்டோ, வீடியோக்களுக்கு MP4) புகைப்படங்களை படமாக்க செய்கிறது.

வீடியோக்களை 1080 பிக்சல், 1440 பிக்சல் மற்றும் 2.7K ரெசல்யூஷன்களில் 24, 25, 30 மற்றும் 50 ஃபிரேம் ரேட்களில் பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளன. இதன் 2.7K ரெசல்யூஷன் 50fps சப்போர்ட் கொண்டிருக்கவில்லை. இவை மட்டுமின்றி மூன்று வீடியோ பதிவு செய்யும் மோட்கள்: பிரீ-ரெக்கார்டிங், லூப் ரெக்கார்டிங் மற்றும் டைம்டு கேப்ச்சர் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் டைம்டு கேப்ச்சர் மோட் கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கேமரா ரெக்கார்டிங் தானாக ஸ்டார்ட் செய்ய வைக்க முடியும். இதன் மூலம் டைம்-லேப்ஸ் வீடியோக்களை பதிவு செய்யலாம். இத்துடன் இதில் உள்ள ஃபிரீஃபிரேம் மோட் (FreeFrame Mode) கொண்டு பயனர்கள் வீடியோ பதிவு செய்த பிறகு, அதன் ஆஸ்பெக்ட் ரேஷியோவை மாற்ற முடியும். இதன் மூலம் பயனர்கள் தங்களது வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அல்லது யூடியூப் என பல்வேறு தளங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்ஸ்டா360 கோ 3 கேமராவில் 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப், ஃபுளோஸ்டேட் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 360 ஹாரிசான் லாக் போன்ற வசதிகள் உள்ளன. இந்த அம்சங்கள் வீடியோக்கள் சீராகவும், ஃபிரேம்கள் அதிர்வுகள் இன்றி தெளிவாகவும் இருக்க செய்கிறது. மேலும் இதில் டூயல் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் 2.2 இன்ச் ஃப்ளிப் டச் ஸ்கிரீன், வாய்ஸ் கமான்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆக்ஷன் பாட் IPX4 சான்று மற்றும் 1270 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. கோ 3 மாட்யுலும் IPX4 சான்று, 310 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் 45 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். ஆக்ஷன் பாட் உடன் சேர்க்கும் போது 170 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
இன்ஸ்டா360 கோ 3 ஆக்ஷன் கேமரா ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் இன்ஸ்டா360 கோ 3 மாடலின் 32 ஜிபி வெர்ஷன் விலை 380 டாலர்கள் என்றும் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வெர்ஷன்களின் விலை முறையே 400 டாலர்கள் மற்றும் 430 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
- ரியல்மி நிறுவனம் 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.
- அதிக ரேம் அம்சம் ரியல்மி நிறுவனத்தின் பிளாக்ஷிப் GT சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரியல்மி நிறுவனம் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை சீன டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறார். 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சீன வலைதளமான வெய்போவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் சாதனம் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் மட்டுமின்றி ரியல்மி நிறுவனமும் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய ரேம் வசதி ரியல்மி நிறுவனத்தின் பிளாக்ஷிப் GT சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

கோப்புப்படம்
முன்னதாக ரியல்மி நிறுவனம் 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் வசதிகளை ரியல்மி GT நியோ 5 மாடலில் வழங்கி இருந்தது. இந்த ஸ்மார்ட்போனும் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ரியல்மி விற்பனை செய்து வரும் இதர ஸ்மார்ட்போன் மாடல்களில் ரியல்மி யுஐ ஸ்கின் மூலம் விர்ச்சுவல் மெமரி வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன்களில் 24 ஜிபி ரேம் வசதி ஹார்டுவேர் வடிவிலேயே வழங்கப்பட இருக்கிறது. அதிக திறன் கொண்ட ரேம் மாட்யுல்கள் சாம்சங் செமிகன்டக்டர் வினியோகம் செய்யும் என்று தெரிகிறது. இதே நிறுவனம் தான் ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி என மூன்று நிறுவனங்களுக்கும் ரேம் வினியோகம் செய்து வருகிறது.
- சாம்சங் அறிமுகம் செய்து இருக்கும் புதிய அம்சம் சீகலர்ஸ் மோட் என்று அழைக்கப்படுகிறது.
- புதிய அம்சம் பயனர்களுக்கு ஒன்பது பிக்சர் பிரீசெட்களை வழங்குகிறது.
சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மார்ட்போன், தொலைகாட்சி சந்தைகளில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் சமீபத்தில் தான் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தனது 2023 டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் புதிய அம்சத்தை வழங்குகிறது. புதிய அம்சம் சீகலர்ஸ் மோட் (SeeColorsMode) என்று அழைக்கப்படுகிறது. புதிய அம்சம் நிறங்களை கண்டறியும் குறைபாடு கொண்டவர்களுக்கும் சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது.

சீகலர்ஸ் மோட் பயனர்களுக்கு ஒன்பது வித்தியாசமான பிக்சர் பிரீசெட்களை வழங்குகிறது. இந்த அம்சம் ரெட், கிரீன் மற்றும் புளூ நிற அளவுகளை மாற்றியமைத்து, திரையில் பயனர்கள் நிறங்கள் இடையே வித்தியாசப்படுத்திக் கொள்ள உதவுகிறது. 2017 ஆண்டு ஆப் வடிவில் வழங்கப்பட்ட சீகலர்ஸ் அம்சம் தற்போது டிவி மற்றும் மமானிட்டர்களின் அக்சபிலிட்டி மெனுக்களில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

2023 மாடல்களை ஏற்கனவே வாங்கி பயன்படுத்தி வருபவர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்குவதற்கான மென்பொருள் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர சாம்சங் நிறுவனம் கலர் விஷன் அக்சஸபிலிட்டி சான்றினை டியுவி ரெயின்லேன்ட்-இடம் பெற்றுள்ளது. எங்கும் ஸ்கிரீன், அனைவருக்கும் ஸ்கிரீன்கள் என்ற சாம்சங் நிறுவன இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய அக்சஸிபிலிட்டி அம்சம் வழங்கப்படுகிறது.
- நாய்ஸ் பட்ஸ் வெர்வ் இயர்பட்ஸ் ENC மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
- சார்ஜிங் கேஸ் சேர்த்து, இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேர பேக்கப் பெறலாம்.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நாய்ஸ் பட்ஸ் வெர்வ் என்று அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் ரூ. 2 ஆயிரத்து 500 விலை பிரிவில் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் இன்-இயர் ரக டிசைன், ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர் டிப்கள் வழங்கப்படுகின்றன. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. IPX5 தர சான்று பெற்று இருக்கும் நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலின் பல்வேறு அம்சங்களை, இயர்பட்ஸ்-இன் ஸ்டெம் பகுதியில் டச் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ஆடியோவை பொருத்தவரை நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் 10mm டிரைவர், குவாட் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அழைப்புகளின் போதும், ஆடியோ தரம் மேம்படும். இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் லோ-லேடன்சி வசதியை கொண்டிருக்கிறது.
நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வசதி உள்ளது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டன்ட், 10mm டிரைவர், குவாட் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் உடன் பெபில் வடிவம் கொண்ட ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு இயர்பட்ஸ்-இல் 45 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும்.
இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் பட்ஸ் வெர்வ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கார்பன் பிளாக், கிளவுட் வைட் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ஒப்போ ஃபைன் N2 ஃப்ளிப் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடல் கேமரா செட்டப் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது ஃபைன்ட் N2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ஃபைன் N2 ஃப்ளிப் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வரிசையில் தான் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் அறிமுகம் நடைபெற இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும், கிளாம்ஷெல் போன்ற மடிக்கக்கூடிய டிசைன் கொண்டிருக்கிறது. ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலின் கேமரா செட்டப் சற்று வித்தியாசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

கோப்புப்படம்
இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்களில் பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இத்துடன் வளைந்த எட்ஜ்கள், ஸ்மார்ட்போனின் பின்புறம் கீழ் பகுதியில் ஒப்போ பிரான்டிங் செய்யப்படுகிறது. மேலும் மூன்று கேமரா சென்சார்கள் அடங்கிய கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலின் கேமரா செட்டப், ஒப்போ ரெனோ 10 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. அதன்படி ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலில் 50MP சோனி பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 32MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.

கோப்புப்படம்
ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.8 இன்ச் E6 AMOLED Full HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
3.26 இன்ச் AMOLED 729x382 பிக்சல், 60Hz, ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
8ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
32MP செல்ஃபி கேமரா
4300 எம்ஏஹெச் பேட்டரி
- ரெட்மி பிராண்டின் இரண்டாம் தலைமுறை டேப்லெட் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய ரெட்மி பேட் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI ஒஎஸ் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் துணை பிரான்டு ரெட்மி தனது இரண்டாவது டேப்லெட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பேட் 2 பெயரில் உருவாகி வரும் புதிய டேப்லெட் FCC வலைதளத்தின் மூலம் லீக் ஆகி உள்ளது.
புதிய ரெட்மி பேட் 2 மாடல் இந்த ஆண்டு இறுதியில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தான் ரெட்மி பேட் 2 விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ரெட்மி பேட் 2 டேப்லெட் 23073RPBFL எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. FCC விவரங்களில் ரெட்மி பேட் 2 மாடல் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

கோப்புப்படம்
இதன் என்ட்ரி லெவல் மாடலில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மற்றொரு வேரியண்ட்-ம் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்-ம் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
புதிய ரெட்மி டேப்லெட் வைபை வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய FCC சான்றின் மூலம், ரெட்மி பேட் 2 மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகி இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ரெட்மி பேட் 2 மாடலில் 2K ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8000 எம்ஏஹெச் பேட்டரி, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.
- ஜியோ போன் 5ஜி பின்புறம் பிளாஸ்டிக் பேக், நடுவே கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது.
- இந்த மாடலில் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஜியோ போன் 5ஜி என்று அழைக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய ஜியோ போன் 5ஜி பற்றிய அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. டுவிட்டர் பயனர் ஒருவர் புதிய ஜியோ போன் 5ஜி மாடல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் மற்றும் சில அம்சங்கள் தெரியவந்துள்ளது.
தோற்றத்தில் ஜியோ போன் 5ஜி மாடல் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் இதர ஸ்மார்ட்போன்களை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் பேக், நடுவே கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது. முன்புறம் வாட்டர் டிராப் நகர நாட்ச் உள்ளது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஜியோ பிரான்டிங் மற்றும் 5ஜி என்று எழுதப்பட்டு உள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் மற்றொரு புகைப்படத்தில் ஜியோ 5ஜி நெட்வொர்க்கில் டெஸ்ட் முடிவுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஜியோ போன் 5ஜி மாடலில் 470Mbps டவுன்லோடு வேகமும், 34Mbps அப்லோடு வேகமும் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஜியோ போன் 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் 5ஜி பிராசஸர் அல்லது மீடியாடெக் டிமென்சிட்டி 700 சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்த ஜியோ போன் 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நத்திங் போன் 1 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
- நத்திங் போன் 2 பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.
நத்திங் நிறுவனத்தின் புதிய நத்திங் போன் 2 மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நத்திங் போன் 2 பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதுதவிர நத்திங் நிறுவனரும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை அவ்வப்போது வழங்கி வருகிறார்.
இந்த வரிசையில், தான் நத்திங் போன் 2 மாடலின் ஐரோப்பாவுக்கான விலை மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய நத்திங் போன் 2 மாடல் இருவித ஸ்டோரேஜ் மற்றும் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நத்திங் போன் 2 மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை 729 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 600 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதன் 512 ஜிபி விலை 849 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 400 என்று நிர்ணயம் செய்யப்படலாம். இந்த விலை விவரங்கள் ஐரோப்பாவுக்கானது என்பதால், மற்ற பகுதிகளில் நத்திங் போன் 2 விலை வேறுப்படலாம். இதோடு, இந்த விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதால், இதில் மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் போன் விலை இந்திய சந்தையில் ரூ. 32 ஆயிரத்து 999 என்று துவங்கியது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தவல்களின் படி நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் நத்திங் போன் 2 மாடல் மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் பெறும் என்றும் நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
- அசுஸ் நிறுவனத்தின் கையடக்க கேமிங் கன்சோலுக்கு அறிமுக சலுகை அறிவிப்பு.
- புதிய அசுஸ் கேமிங் கன்சோல் வின்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கையடக்க கேமிங் கன்சோலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேமிங் கன்சோல் இது ஆகும். அறிமுகம் மட்டுமின்றி புதிய அசுஸ் ரோக் Ally மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோலில் 7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 120Hz ரிப்ரெஷ் ரேட், AMD ரேடியான் Navi3 கிராஃபிக்ஸ், 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் விண்டோஸ் 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

இந்த கன்சோல் ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் உள்ளிட்ட தளங்களின் கேம்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் தளத்திற்கான மூன்று மாதங்கள் சந்தா வழங்கப்படுகிறது.
அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:
7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன்
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் APU
16 ஜிபி LPDDR5 6400MHz ரேம்
512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD ஸ்டோரேஜ்
விண்டோஸ் 11 ஒஎஸ்
ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சப்போர்ட்
டூயல் ஸ்பீக்கர்
அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம்
3.5mm ஹெட்போன் ஜாக்
யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட்
ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட்
40 வாட் ஹவர் பேட்டரி
65 வாட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அசுஸ் ரோக் Ally மாடலின் Z1 எக்ஸ்டிரீம் வெர்ஷன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 12-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அசுஸ் ஸ்டோர், இ-ஷாப் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற இருக்கிறது. ஜூலை 7-ம் தேதி இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற உள்ளது.
அறிமுக சலுகையாக அசுஸ் ரோக் Ally மாடலை அசுஸ் இ-ஷாப் அல்லது அசுஸ் ஸ்டோர்களில் ஜூலை 12-ம் தேதி வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள அசுஸ் ரோக் Ally கேஸ் வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபில் போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரென்டர்களின் படி ஒன்பிளஸ் V ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஹேசில்பிலாடு பிரான்டிங், அலர்ட் ஸ்லைடர், லெதர் போன்ற ஃபினிஷ் மற்றும் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. ரென்டர்களில் ஆன்டெனா பேன்ட்கள் காணப்படுவதால், இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள், பெரும்பாலும் பெரிஸ்கோப் கேமரா சேர்த்து வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் கேமரா பம்ப் பேக் பேனலின் மத்தியிலும், எல்இடி ஃபிளாஷ் வலதுபுற ஓரத்திலும் காணப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது.
வெளிப்புற டிஸ்ப்ளேவின் மேல்புறம் பன்ச் ஹோல் கேமரா திரையின் மத்தியல் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை எந்த அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், வெளிப்புற ஸ்கிரீன் சற்றே பெரிதாக காட்சியளிக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
Photo Courtesy: @OnLeaks @smartprix
- சாம்சங் அன்பேக்டு நிகழ்வு முதல் முறையாக கொரியாவில் நடைபெற இருக்கிறது.
- கேலக்ஸி வாட்ச் 6 சீரிசில் ஏராளமான மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் ரென்டர்கள் சமீபத்தில் தான் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புதிய கேலக்ஸி வாட்ச் மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய விலை விவரங்கள் ஃபிரான்சில் இருந்து வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இவை ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபட அதிக வாய்ப்புகள் உண்டு.
லீக் ஆன விலை விவரங்கள்:
கேலக்ஸி வாட்ச் 6 40mm ப்ளூடூத் கிராஃபைட் மற்றும் கிரீம் 319.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 774
கேலக்ஸி வாட்ச் 6 40mm 4ஜி கிராஃபைட் மற்றும் கிரீம் 369.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 236
கேலக்ஸி வாட்ச் 6 44mm ப்ளூடூத் கிராஃபைட் மற்றும் சில்வர் 349.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் 31 ஆயிரத்து 439
கேலக்ஸி வாட்ச் 6 44mm 4ஜி கிராஃபைட் மற்றும் சில்வர் 399.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் 35 ஆயிரத்து 931

கோப்புப் படம்
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 43mm ப்ளூடூத் பிளாக் மற்றும் சில்வர் 419.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 727
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 43mm 4ஜி பிளாக் மற்றும் சில்வர் 469.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 42ஆயிரத்து 219
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 47mm ப்ளூடூத் பிளாக் மற்றும் சில்வர் 449.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 422
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 47mm 4ஜி பிளாக் மற்றும் சில்வர் 499.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 44 ஆயிரத்து 914
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாத கடைசி வாரத்தில் அன்பேக்டு நிகழ்வு முதல் முறையாக கொரியாவில் நடைபெறுகிறது. இதே நிகழ்வில் கேலக்ஸி Z ஃப்ளிப் 5, கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- விவோ நிறுவனம் X90 சீரிஸ் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸ் கொண்டிருக்கும் என தகவல்.
- புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ, தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் விவோ X90s ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது விவோ நிறுவனத்தின் நான்காவது X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இதுதவிர விவோ X90s மற்றும் ஐகூ 11s ஸ்மார்ட்போன் மாடல்களின் அம்சங்கள் வெளியாகி உள்ளது.
விவோ X90s ஸ்மார்ட்போன் சீன சந்தைில் ஜூன் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

கோப்புப் படம்
சீன சமூக வலைதளமான வெய்போவில் டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் புதிய விவோ X90s மாடல் விவரங்களை பகிர்ந்து இருக்கிறார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிளஸ் பிராசஸர், LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இதுதவிர இணையத்தில் வெளியான மற்றொரு தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐகூ 11s ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான ரேம், 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 200 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.






