என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
    • ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    நார்டு 3 மாடல் அதிகாரப்பூர்வ படங்கள், விலை, 80 வாட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     

    டீசரில், புதிய ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், போஸ்டரில், தி லேப் (The Lab) வாசகம் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் கம்யுனிட்டி ஃபோரமில் வெளியான தகவல்களின் படி நார்டு 3 மாடல் இந்தியா, ஐரோப்பா மற்றும் APAC பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    முன்னதாக தி லேப் வாசகம், ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T சாதனங்களின் வெளியீட்டுகளுக்கு பயன்படுத்தியது. ஒன்பிளஸ் கம்யுனிட்டிக்குள் தி லேப் வாசகம் வெற்றிகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2770x1240 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    • ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் உடல்நல டிராக்கிங் வசதிகளை கொண்டுள்ளது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட வசதி கொண்டிருக்கிறது.

    ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் பிரீமியம் ப்ளூடூத் காலிங் வாட்ச் கொண்டிருக்கிறது. டேகர் லூக்ஸ் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டயல், லெதர், மெட்டாலிக் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல், இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட், இதய துடிப்பு மானிட்டர் செய்யும் வசதி, SpO2 டிராக்கிங், ஸ்லீப் மானிட்டரிங் மற்றும் மகளிர் உடல் ஆரோக்கயத்தை டிராக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

     

    புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் சப்போர்ட் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

    ஃபயர் போல்ட் அல்டிமேட் அம்சங்கள்:

    1.39 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன்

    வாட்ச் ஃபேஸ்கள்

    ப்லூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட்

    சின்க் கான்டாக்ட்

    இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    புஷ் பட்டன் மற்றும் சுழலும் கிரவுன்

    123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட்

    ஸ்லீப், SpO2 மற்றும் இதய துடிப்பு டிராக்கிங்

    மகளிர் உடல் நல டிராக்கிங்

    IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்

    குடிநீர் மற்றும் செடன்டரி ரிமைன்டர்

    ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்

    வானிலை அப்டேட், இன்பில்ட் கேம்ஸ்

    மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல்

    270 எம்ஏஹெச் பேட்டரி

     

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்-இன் லெதர் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் மெட்டாலிக் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக், சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஃபயர்போல்ட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் இன்று துவங்குகிறது. லெதர் ஸ்டிராப் மாடல் விலை ரூ. 1799 என்றும் மெட்டாலிக் ஸ்டிராப் விலை ரூ. 1999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடல் முழு சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    • அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. அமேஸ்ஃபிட் பாப் 3S என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் HD AMOLED டிஸ்ப்ளே, 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், மெட்டாலிக் டிசைன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் இதய துடிப்பு, மன அழுத்த அளவுகள், நாடியில் ஆக்சிஜன் அளவுகளை கண்டறியும் திறன் உள்ளது. இந்த வாட்ச்-இல் ஜிபிஎஸ் வழங்கப்படவில்லை. எனினும், ஸ்மார்ட்போனில் இருக்கும் ஜிபிஎஸ் பயன்படுத்த வழி செய்கிறது. புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடலில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 12 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது.

     

    அமேஸ்ஃபிட் பாப் 3S அம்சங்கள்:

    1.96 இன்ச் 410x502 பிக்சல் AMOLED ஸ்கிரீன்

    ப்ளூடூத் 5.2

    பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர்

    அக்செல்லோமீட்டர் சென்சார்

    ஹார்ட் ரேட் சென்சார்

    3-ஆக்சிஸ் மோஷன் சென்சார்

    24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2

    மன அழுத்தம் டிராக் செய்யும் சென்சார்

    கலென்டர் ரிமைன்டர், கால் நோட்டிஃபிகேஷன்

    செடன்டரி ரிமைன்டர், ஸ்மார்ட் ஆப்ஸ் நோட்டிஃபிகேஷன்

    மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)

    300 எம்ஏஹெச் பேட்டரி

    12 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சிலிகான் ஸ்டிராப் வழங்கப்படுகிறது. இதன் மெட்டாலிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ஸ்டிராப் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • இந்தியாவில் மொபைல் கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
    • அசுஸ் தனது ரோக் Ally மாடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடிவு.

    அசுஸ் நிறுவனம் தனது கையடக்க கேமிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய அசுஸ் ரோக் Ally இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே அசுஸ் ரோக் Ally மாடல் ஜப்பான், சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அசுஸ் ரோக் இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரோக் Ally மாடலுக்கான டீசர் ட்விட் செய்யப்பட்டு உள்ளது. அசுஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இந்திய கேமர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

    தற்போது நின்டென்டோ ஸ்விட்ச் மற்றும் வால்வ் ஸ்டீம் டெக் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் வாங்க முடியும். எனினும், இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இவற்றின் விலை அதிகரிக்கும். மேலும் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை கிடைக்காது.

    இந்தியாவில் மொபைல் கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அசுஸ் தனது ரோக் Ally மாடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடிவு செய்து இருக்கிறது. இந்த கன்சோல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது சிறப்பான நகர்வாக இருக்கும் போதிலும், இவை சந்தையில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை அவற்றின் விலை தான் முடிவு செய்யும்.

    சமீபத்தில் வெளியான தகவல்களின் படி AMD ரைசன் Z1 பிராசஸர் கொண்ட ரோக் Ally மாடலின் விலை ரூ. 71 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும், AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் பிராசஸர் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:

    அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோலில் 7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் AMD ரேடியான் Navi3 கிராஃபிக்ஸ், 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD வழங்கப்பட்டு உள்ளது.

    விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கும் இந்த கன்சோல் ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் உள்ளிட்ட தளங்களின் கேம்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் தளத்திற்கான மூன்று மாதங்கள் சந்தா வழங்கப்படுகிறது. இதில் உள்ள டூயல் ஸ்பீக்கர் செட்டப், அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம், சிறப்பான ஆடியோவுடன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

    கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. அசுஸ் ரோக் Ally மாடலில் 40 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
    • இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் நிர்வானா 525 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய கேமிங் இயர்பட்ஸ் வெளியாகி உள்ளது.

    புதிய போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. இத்துடன் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை போட் நிறுவனத்தின் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த இயர்பட்களில் எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆக்டிவேட் செய்ய டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இத்துடன் 40ms வரையிலான லோ லேடன்சி வசதி BEAST மோடில் வழங்கப்படுகிறது.

    புதிய ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்ஸடன்ட் வேக் அன்ட் பேர் (IWP) அம்சம் உள்ளது. இது மிக விரைவில் ஸ்மார்ட்போன்களுடன் இணைய செய்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

    போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அம்சங்கள்:

    10mm டிரைவர்கள்

    எல்இடி லைட்கள்

    கேமிங் சார்ந்த டிசைன்

    ப்ளூடூத் 5.3

    போட் சிக்னேச்சர் சவுன்ட்

    டச் கண்ட்ரோல்

    குவாட் மைக் மற்றும் ENx தொழில்நுட்பம்

    400 எம்ஏஹெச் பேட்டரி (கேஸ்)

    40 எம்ஏஹெச் பேட்டரி (இயர்பட்ஸ்)

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    யுஎஸ்பி டைப் சி கனெக்டர்

    BEAST மோட் மற்றும் 40ms வரையிலான லோ லேடன்சி

    IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இத்துடன் பிளாக் சாபர் மற்றும் வைட் சாபர் நிறங்களில் கிடைக்கிறது. 

    • நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • நத்திங் போன் 2 மாடல் ஒன்பிளஸ் 11R மற்றும் பிக்சல் 7a மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.

    நத்திங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் 2 அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மூலம் நத்திங் நிறுவனம் அமெரிக்க சந்தையில் களமிறங்குகிறது. நத்திங் போன் 2 சர்வதேச வெளியீட்டின் போதே இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மாடலின் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் சில விவரங்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    எதிர்பார்க்கப்படும் விலை:

    நத்திங் போன் 2 மாடல் ஒன்பிளஸ் 11R மற்றும் பிக்சல் 7a மாடல்களுக்கு போட்டியாக அமையும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி புதிய நத்திங் போன் 2 துவக்க விலை ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். கடந்த ஆண்டு மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தப்பட்ட நத்திங் போன் 1 விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    முந்தைய நத்தங் போன் 1 மாடலுடன் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை. இதே போன்றே புதிய நத்தங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்றே தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    • கூகுள் ஆப் வெர்ஷன் 14.24-ல் இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் குறியீட்டு பெயர்கள் உள்ளன.
    • பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் வாட்ச் 2 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் வாட்ச் 2 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் பிக்சல் 8 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக்சல் வாட்ச் 2 மாடல் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன் படி ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர பிக்சல் வாட்ச் 2 மாடலின் சிறுவர் மட்டும் பயன்படுத்தும் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், இது ஃபிட்பிட் பிராண்டிங்கில் விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. சமீபத்திய கூகுள் ஆப் அப்டேட் வெர்ஷன் 14.24 இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களுக்கான குறியீட்டு பெயர்களை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குறியீட்டு பெயர்கள் அரோரா மற்றும் இயோஸ் ஆகும்.

    இவை ரோமன் மற்றும் கிரேக்க பெயர்களுடன் தொடர்புடையவை ஆகும். இதில் ஒரு மாடல் எல்டிஇ மோடெம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களிலும் 41 மில்லிமீட்டர் கேஸ் வழங்கப்படுகிறது. இவை கூகுள் வாட்ச் ஸ்டிராப்களுடன் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

    டிசைன் அடிப்படையில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், தற்போதைய தகவல்களை கடந்து பிக்சல் வாட்ச் 2 மாடலின் அம்சங்களில் வெளியீட்டுக்கு முன் மாற்றங்கள் செய்யப்படலாம்.

    • சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பிஐஎஸ் விவரங்களில் மாடல் நம்பர் அம்பலமாகி இருக்கிறது.
    • இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் அட்ரினோ GPU வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் அன்பேக்டு நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் கேலக்ஸி Z ஃபோல்டு 5, கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் முதற்கட்டமாக தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் SM_731B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பிஐஎஸ் விவரங்களில் மாடல் நம்பர் தவிர வேறு எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. எனினும், இதன் மூலம் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் மின்சாதனங்கள் பிஐஎஸ் சான்று பெற வேண்டியது அவசியம் ஆகும்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் 6.7 இன்ச் உள்புற ஸ்கிரீன், மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட், 120Hz ரிப்ரெஷ் ரேட், வெளிப்புற பேனலில் 3.4 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் அட்ரினோ GPU வழங்கப்படுகிறது.

    இந்த மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1, 12MP டூயல் கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: OnLeaks x Mediapeanut

    • சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரெட்மி இயர்பட்சை அறிமுகம் செய்தது.
    • புதிய இயர்பட்ஸ் லோ லேடன்சி மோட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது பேட் 6 டேப்லெட் உடன் புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட், ப்ளூடூத் 5.3 மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் கன்ட்ரோல்கள் மற்றும் லோ லேடன்சி ஆப்ஷன் உள்ளது.

    புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

    ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் அம்சங்கள்:

    ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, SBC கோடெக், கூகுள் ஃபாஸ்ட் பேர்

    12 மில்லிமீட்டர் டிரைவர்கள்

    என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்

    லோ லேடன்சி கேமிங் மோட்

    டச் கன்ட்ரோல்கள்

    IPX4 ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    ஹெட்செட்டில் 34 எம்ஏஹெச் பேட்டரி

    சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் ஏர் வைட் மற்றும் பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1399 ஆகும். அறிமுக சலுகையாக ஜூன் 20-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை இந்த இயர்பட்ஸ் ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை அமேசான், சியோமி வலைதளங்கள் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. 

    • கிஸ்மோர் நிறுவனம் கடந்த மாதம் கிஸ்ஃபிட் குளோ Z ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.
    • புதிய கிஸ்மோர் கர்வ் மாடலில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது.

    கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய மேட்-இன்-இந்தியா கிஸ்மோர் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கிஸ்மோர் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் 1.39 இன்ச் அல்ட்ரா HD ஆல்வேஸ் ஆன் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

    பிரீமியம் மெட்டல் பாடி கொண்டிருக்கும் கிஸ்மோர் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருப்பதால், நேரடி சூரிய வெளிச்சத்திலும் வாட்ச்-ஐ தெளிவாக பயன்படுத்த செய்கிறது. இதில் ஏராளமான கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமீபத்திய செயலிகள், செட்டிங்ஸ் மற்றும் அம்சங்களை எளிதில் இயக்க முடியும்.

     

    கிஸ்மோர் கர்வ் அம்சங்கள்:

    1.39 இன்ச், மெல்லிய மற்றும் வளைந்த டிசைன்

    500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்ப்லிட் ஸ்கிரீன்

    ப்ளூடூத் காலிங் 5.0

    இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்

    ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்ட், ஏாளமான வாட்ச் ஃபேஸ்கள்

    அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஹெல்த் சூட்: SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ், மென்ஸ்டுரல்

    ஸ்மார்ட் அம்சங்கள்: பிரைவசி லாக், பில்ட்-இன் கேம்ஸ், கால்குலேட்டர்

    IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட்

    JUOU ப்ரோ ஆப் சப்போர்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்

    கிஸ்மோர் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் உண்மை விலை ரூ. 1699 ஆகும். இந்த ஸ்மா்ட்வாட்ச்- பிளாக், கிரே, ஆலிவ் கிரீன் மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    • சாம்சங் கேலக்ஸி S22 FE மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை.
    • புதிய கேலக்ஸி S23 FE மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபேன் எடிஷன் (FE) சீரிஸ் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதைத் தொடர்ந்து கேலக்ஸி S23 FE மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கின. அதன்பிறகு லீக் ஆன ஏராளமான தகவல்களை கொண்டு இந்த மாடல் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்பட்டு வருகிறது.

    முன்னதாக கேலக்ஸி S21 FE மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கேலக்ஸி S22 FE மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. தற்போது கேலக்ஸி S23 FE மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த மாடலின் அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்கள் கொரியாவில் இருந்து வெளியாகி உள்ளன.

    அதன்படி கேலக்ஸி S23 FE மாடலின் பேட்டரி விவரங்கள் சேஃப்டிகொரியா சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர கேலக்ஸிகிளப் வலைதள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி EB-BS711ABY எனும் மாடல் நம்பர் கொண்டிரும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் SM-S711 எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 50MP+ 12MP+ 12MP கேமரா சென்சார்கள், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • ஹாமர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
    • புதிய ஹாமர் ஃபிட் பிளஸ் மாடலில் 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

    ஹாமர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் உறுதியான மெட்டாலிக் பாடி மற்றும் சிலிகான் ஸ்டிராப் கொண்டுள்ளது.

    இத்துடன் 1.85 இன்ச் அளவில் பெரிய ஸ்கிரீன், 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹாமர் ஃபிட் பிளஸ் மாடலில் ஏராளமான உடல்நலம் டிராக் செய்யும் வசதிகள்- இதய துடிப்பு, இரத்த அழுத்தம், மாதவிடாய், SpO2 போன்ற வசதிகள் உள்ளன. மேலும், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹாமர் ஃபிட் பிளஸ் அம்சங்கள்:

    1.85 இன்ச் 240x286 பிக்சல் டிஸ்ப்ளே

    100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ப்ளூடூத் காலிங்

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், இன்பில்ட் கேம்ஸ்

    பாஸ்வேர்டு ப்ரோடெக்ஷன், DND

    ஸ்டாப்வாட்ச், ரெய்ஸ்-டு-வேக்

    இரத்த அழுத்தம், SpO2, மாதவிடாய் மற்றும் இதய துடிப்பு மாணிட்டரிங் வசதி

    ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

    IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

    அதிகபட்சம் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஹாமர் ஃபிட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 399 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜூன் 11 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.

    ×