என் மலர்
புதிய கேஜெட்டுகள்

கோப்பு படம்
பிஐஎஸ் சான்றுடன் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 இந்திய வெளியீடு உறுதி?
- சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பிஐஎஸ் விவரங்களில் மாடல் நம்பர் அம்பலமாகி இருக்கிறது.
- இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் அட்ரினோ GPU வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் அன்பேக்டு நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் கேலக்ஸி Z ஃபோல்டு 5, கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் முதற்கட்டமாக தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் SM_731B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பிஐஎஸ் விவரங்களில் மாடல் நம்பர் தவிர வேறு எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. எனினும், இதன் மூலம் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் மின்சாதனங்கள் பிஐஎஸ் சான்று பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் 6.7 இன்ச் உள்புற ஸ்கிரீன், மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட், 120Hz ரிப்ரெஷ் ரேட், வெளிப்புற பேனலில் 3.4 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் அட்ரினோ GPU வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1, 12MP டூயல் கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படும் என்று தெரிகிறது.
Photo Courtesy: OnLeaks x Mediapeanut






