என் மலர்
மொபைல்ஸ்
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ55 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஏ54 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இதில் 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒ.எஸ்.11 கொண்டிருக்கும் ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 15,490 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 17,490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய விலையில் விற்பனைக்கு வருகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் நோட் 1 மாடலை அறிமுகம் செய்து கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்கியது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனின் விலை அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499 என உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இன் நோட் 1 விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை இன் நோட் 1 விலையில் ரூ. 1500 குறைக்கப்பட்டு ரூ. 9499 என மாறி இருக்கிறது.

விலை குறைப்பு ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது அமலுக்கு வருகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போதைய விலை குறைப்பு நிரந்தரமானதா அல்லது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
போக்கோ நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ சி31 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. இதில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ சி31 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

போக்கோ சி31 ஸ்மார்ட்போன் ஷேடோ கிரே மற்றும் ராயல் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 8,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 2 ஆம் தேதி பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் முறையே ரூ. 7999 மற்றும் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ரெட்மி பிராண்டின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் எம்.ஐ. வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்போர்ட் மற்றும் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களும் ஆரா 360 டிசைன் கொண்டிருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

ரெட்மி 9ஐ ஸ்போர்ட் மற்றும் 9ஏ ஸ்போர்ட் மாடல்கள் கார்பன் பிளாக், மெட்டாலிக் புளூ மற்றும் கோரல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 9ஐ ஸ்போர்ட் 2 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 6,999 என்றும் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 7,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி 9ஏ ஸ்போர்ட் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 8,799 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 9,299 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் தீபாவளி எடிஷன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எப்19எஸ் மற்றும் ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் தீபாவளி எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒப்போ எப்19எஸ் மாடல் ஏ.ஜி. ஷிம்மரிங் சேண்ட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் பிளாக் மற்றும் குளோயிங் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 ஆகும். விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போன் மஜெஸ்டிக் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இதில் பிரத்யேக வால்பேப்பர், யு.ஐ. மற்றும் சா்ஜிங் இன்டர்பேஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 41,990 ஆகும். இதன் விற்பனை அக்டோபர் 6 ஆம் தேதி துவங்குகிறது.
இரு ஸ்மார்ட்போன்களுக்கும் பிரத்யேக கேஷ்பேக் மற்றும் வங்கி சார்ந்த பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
போக்கோ நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் சி31 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் துவங்க இருக்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய போக்கோ சி31 பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்-டிராப் நாட்ச், நீண்ட பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கும் என தற்போதைய டீசரில் தெரியவந்துள்ளது.

முன்னதாக போக்கோ சி3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்போடர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. போக்கோ சி3 மாடலில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கூகுள் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் கேமரா அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் கேமரா விவரங்கள் கூகுள் கேமரா செயலியின் குறியீடுகள் மூலம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி பிக்சல் 6 ப்ரோ மாடலில் அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 0.7எக்ஸ் மற்றும் 1.0 எக்ஸ் அளவில் ஜூம் லெவல்கள் இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன்கள் 4கே வீடியோக்களை நொடிக்கு 60 பிரேம் வேகத்தில் பதிவு செய்யும் வசதி, அதிகபட்சம் 7எக்ஸ் ஜூம் கொண்டிருக்கின்றன. 4கே அல்லது எப்.ஹெச்.டி. தரத்தில் பதிவு செய்யும் போது அதிகபட்சம் 20 எக்ஸ் வரையிலான ஜூம் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களுக்கும் இதே அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பேபி மோட், நிமா ஏஸ்தடிக், மோஷன் பிளர், மேஜிக் இரேசர், பேஸ் டி-பிளர், மேனுவல் வைட் பேலண்ஸ், போர்டிரெயிட் ஸ்பாட்லைட், சீன் லாக் மற்றும் ப்ளூடூத் மைக்ரோபோன் வசதி என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஆமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 11 5ஜி பேண்ட்களுக்கான வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐ.பி.52 சான்று, வைபை 6, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி +256 ஜிபி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்தில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரிடிசண்ட் கிளவுட் மற்றும் மிட்நைட் ஸ்கை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டெக்ஸ்ச்சர் டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி 9 ஆக்டிவ் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி 9 ஆக்டிவ் கார்பன் பிளாக், கோரல் கிரீன் மற்றும் மெட்டலிக் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 10,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரீமியம் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் டுயோ 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் இரண்டு 5.8 இன்ச் பிக்சல் சென்ஸ் பியூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் 8.3 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஆடியோ, என்.எப்.சி. போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அம்சங்கள்
- 5.8 இன்ச் 1344x1892 பிக்சல் அமோலெட் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 ஜி.பி.யு.
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11
- ஒரு இ-சிம், ஒரு நானோ சிம்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 12 எம்பி பிரைமரி கேமரா, ஓ.ஐ.எஸ். டூயல் எல்.இ.டி. பிளாஷ்
- 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஓ.ஐ.எஸ்.
- 12 எம்பி செல்பி கேமரா
- யு.எஸ்.பி டைப் சி ஆடியோ
- 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ., 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
- 4449 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 23 வாட் பாஸ்ட் சார்ஜிங்
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடல் கிளேசியர் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை 1499.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,10,675 என்றும் 256 ஜிபி விலை 1599.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,18,050 என்றும் 512 ஜிபி விலை 1799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,32,810 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது எப்19எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
இது ஏ.ஜி. ஷிம்மெரிங் சேண்ட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இதன் மற்ற அம்சங்கள் ஒப்போ எப்19 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
Get ready to say goodbye to battery anxiety with the #OPPOF19s - A combination of the powerful 33W Flash Charge and a long-lasting 5000mAh battery.
— OPPO India (@OPPOIndia) September 22, 2021
Catch the launch event on 27th September at 3:30 pm.
Know more: https://t.co/ogCfEp6BE7pic.twitter.com/eiuspjVVds
அதன்படி ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் ஆமோலெட் ஸ்கிரீன், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது.
ஐகூ நிறுவனம் இந்தியாவில் தனது இசட்5 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருக்கிறது.
ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 27 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் டீசர் மட்டும் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய டீசர்களின் படி ஐகூ இசட்5 5ஜி மாடலில் மூன்று கேமரா சென்சார்கள், எல்.இ.டி. பிளாஷ், செவ்வக கேமரா மாட்யூல், பக்கவாட்டில் கைரேகை சென்சார் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் புளூ நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது.

முந்தைய தகவல்களில் ஐகூ இசட்5 மாடலில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆமோலெட் பேனல் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐகூ இசட்5 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.






