search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    போக்கோ எம்4 ப்ரோ டீசர்
    X
    போக்கோ எம்4 ப்ரோ டீசர்

    போக்கோ எம்4 ப்ரோ இந்த தேதியில் தான் வெளியாகிறது

    போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


    போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் புதிய போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது போக்கோ எம்3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கிறது.

    புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரில் அதன் அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி போக்கோ ஸ்மார்ட்போன் 21091116ஏசி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.



    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முந்தைய போக்கோ எம்3 ப்ரோ மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடலின் விலையும் முந்தைய மாடலை போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை போக்கோ எம்4 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 5ஜி கனெக்டிவிட்டி, 4 ஜிபி+64 ஜிபி மற்றும் 6 ஜிபி+128 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. 
    Next Story
    ×