search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா எக்ஸ்.ஆர்.20
    X
    நோக்கியா எக்ஸ்.ஆர்.20

    அசத்தல் அம்சங்களுடன் நோக்கியா ரக்கட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

    நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ரக்கட் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் கொண்டிருக்கிறது.


    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஸ்பேஷியல் ஆடியோ, புதிய ஸ்பீடுவார்ப் மோட் உள்ளது. 

     நோக்கியா எக்ஸ்.ஆர்.20

    புதிய நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போன் 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போன் கிராணைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 46,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அக்டோபர் 20 முதல் அக்டோபர் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது.
    Next Story
    ×