என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • ரெட்மி K50i ஸ்மார்ட்போன் பேண்டம் ப்ளூ, ஸ்டெல்த் பிளாக் மற்றும் குவிக் சில்வர் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
    • 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது.

    ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ரெட்மி K50i என்கிற மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

    இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸர் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று உள்ளது.


    5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது. இதன் மூலம் 15 நிமிடத்தில் 50சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் 46 நிமிடத்தில் 100 சதவீதம் சார் செய்ய முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஸ்ப்ளே மேட் ஏ+ ரேட்டிங் பெற்ற முதல் எல்.சி.டி மொபைல் இதுவாகும்.

    ரெட்மி K50i ஸ்மார்ட்போன் பேண்டம் ப்ளூ, ஸ்டெல்த் பிளாக் மற்றும் குவிக் சில்வர் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25 ஆயிரத்து 999 எனவும், 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான், Mi-ன் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.

    • ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
    • ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

    அம்சங்களை பொருத்தவரை ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 மேக்ஸ் SoC புராசஸரையும் கொண்டுள்ளது.


    இந்த இரண்டு மாடல்களும் ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. ரெனோ 8 மாடலின் 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடலின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.45 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடல் கிளேசுடு பிளாக் மற்றும் கோல்டன் கிரீன் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • நத்திங் போன் வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.
    • முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற்றவர்களுக்கு மட்டுமே முதலில் நத்திங் போன் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதன் முதற்கட்ட முன்பதிவி முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்ட முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் நத்திங் போனின் முன்பதிவு மீண்டும் தொடங்கி உள்ளது. ஜூலை 20-ந் தேதி நள்ளிரவு வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் நத்திங் போன் விற்பனைக்கு வர உள்ளது.

    • லாக்டவுன் மோட் என்பது ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும்.
    • ஐபோன் பயனர்களுக்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள், ஐபேட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க லாக்டவுன் மோட் அம்சத்தை இந்த ஆண்டு நடைபெற்ற WWDC நிகழ்வில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. லாக்டவுன் மோட் என்பது ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். ஐபோன் பயனர்களுக்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    லாக்டவுன் மோட் ஆனது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், பிற விஐபிகளுக்கு போனில் புதிய பாதுகாப்பு அடுக்கைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. பெகாசஸ் ஊழல் நடைபெற்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகே ஆப்பிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இஸ்ரேலின் NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் ஹேக் செய்யப்பட்டது. இதன்பின் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரும் குறிவைக்கப்பட்டனர். இதற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.


    தற்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் iOS 16 வெர்ஷனில் கிடைக்குமாம். இந்த லாக்டவுன் மோட் ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் கணினிகளில் வேலை செய்யும் என கூறப்படுகிறது.

    இந்த அம்சம் மீறி ஆப்பிள் சாதனங்களை ஹேக் செய்வது என்பது முடியாத காரியம் என சொல்லப்படுகிறது. அப்படி லாக்டவுன் மோடையும் மீறி ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அவர்களுக்கு 2 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.16 கோடியாம்.

    • மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் நெப்டியூன் கிரீன் மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி71 என்கிற 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது மோட்டோ நிறுவனம்.

    அதன்படி ரூ.19 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த மோட்டோவின் ஜி71 ஸ்மார்ட்போனின் விலை ரூ.4 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ.15 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர எஸ்.பி.ஐ கிரெடிட் கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு மேலும் ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


    அம்சங்களை பொருத்தவரை இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 13 5ஜி பேண்ட்களுக்கான சப்போர்ட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் டர்போசார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் நெப்டியூன் கிரீன் மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

    • ரியல்மி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் நைட்ரோ புளூ நிறத்தில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

    ரியல்மி நிறுவனம் அதன் GT நியோ 3 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இதையடுத்து கடந்த வாரம், அதன் ஸ்பெஷல் எடிஷனை அந்நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனான இதற்கு ரியல்மி GT நியோ 3 தார்: லவ் மற்றும் தண்டர் என்று பெயரிடப்பட்டு இருந்தது.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் உடன் தீம் கார்டுகள், வால்பேப்பர், ஸ்டிக்கர்கள், மெடல் மற்றும் சிம் கார்டு டிரே ஆகியவை வழங்கப்படுகின்றன. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 3 மாடலில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளன. அந்த வகையில் 6.7 இன்ச்ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், மீடியாடெக் டைமென்சிட்டி 8100 பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    கேமராவை பொருத்தவரை 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெற்று உள்ளது. இதில் அதிகபட்சமாக 150 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 15 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் நைட்ரோ புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நேற்று முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுக சலுகையாக ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு 5 சதவீதம் உடனடி டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் இன்று அறிமுகமானது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. நத்திங் போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸரை கொண்டுள்ளது.


    இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது. இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இதில் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

    சார்ஜ் செய்துகொள்ள யு.எஸ்.பி டைப் சி போர்ட் இந்த போனில் இடம்பெற்று உள்ளது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் இதில் உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்று உள்ளன. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 3 வருடத்துக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும், 2 வருடத்திற்கான செக்யூரிட்டி பேட்சுகளும் வழங்கப்படுகின்றன.


    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான இது மூன்று வித மெமரி வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் ஆகிய மூன்று விதமான மெமரி ஆப்சன்களுடன் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.

    விலையைப் பொருத்தவரை நத்திங் போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

    • ஐகூ 10 ப்ரோ மாடலில் மட்டுமே 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
    • அதன் ஐகூ 10 மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. வெண்ணிலா ஐகூ 10 மற்றும் ஐகூ 10 ப்ரோ ஆகிய மாடல்கள் ஐகூ 10 சீரிஸில் இடம்பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 19-ந் தேதி சீன சந்தையில் அறிமுகம் ஆக உள்ளது. வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில் 10 சீரிஸ் மாடல்களில் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என ஐகூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இதன்மூலம் உலகின் அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. ஐகூ 10 ப்ரோ மாடலில் மட்டுமே 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும், அதன் ஐகூ 10 மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    தற்போதைய தகவல்படி 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் ஐகூ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 0 முதல் 63 சதவீதம் வரை ஐந்து நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் என தெரியவந்துள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. விரைவில் அதுவும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நத்திங் போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டது. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு பாஸ் ஒன்று வழங்கப்படும் அது இருந்தால் மட்டுமே நத்திங் போனை வாங்க முடியும்.

    இந்த போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும், அந்த தொகையை செலுத்தினால் தான் பாஸ் வழங்கப்படும். இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நத்திங் போன் பற்றிய மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நத்திங் போனின் ரீ-டெயில் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதன்மூலம் நத்திங் போன் (1) மாடலுக்கு சார்ஜர் வழங்கப்பட மாட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ரீ-டெயில் பாக்ஸ் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. 

    • வருகிற ஜூலை 21ம் தேதி ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    • இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மே மாதமே சீனாவில் அறிமுகம் ஆனது.

    ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் கடந்த மாதம் வெளியாகவில்லை.

    வருகிற ஜூலை 21-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட் மூலம் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.62 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ மாடல் ஸ்நாப்டிராகன் 7 Gen 1 புராசஸரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதர விவரங்கள் அடுத்தடுத்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    இந்நிலையில் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரம் லீக் ஆகி உள்ளது.அதன்படி ரெனோ 8 மாடலின் விலை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.33 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடலின் விலை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.46 வரை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6.6இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே உடன் வருகிறது.
    • 4ஜிபி ரேம் உடன் வரும் இந்த போனில் 7ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ளும் மெமரி ஃபியூசன் அம்சம் உள்ளது.

    டெக்னோ நிறுவனத்தின் ஸ்பார்க் 8P ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. இது ஆக்டாகோர் மீடியாடெக் புராசஸரை கொண்டுள்ளது. 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.


    விலையை பொருத்தவரை டெக்னோ ஸ்பார்க் 8P ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அட்லாண்டிக் ப்ளூ, ஐரிஸ் பர்பிள், டஹிடி கோல்டு மற்றும் டர்குயிஸ் சியன் ஆகிய நிறங்களில் வருகிறது.

    ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6.6இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே உடன் வருகிறது. 4ஜிபி ரேம் உடன் வரும் இந்த போனில் 7ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ளும் மெமரி ஃபியூசன் அம்சம் உள்ளது. இதன் பிரதான கேமரா 50மெகாபிக்சல் உடனும், செல்ஃபி கேமரா 8 மெகாபிக்சல் உடனும் வருகிறது.

    • M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது.
    • M13 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது.

    சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி M13 4ஜி மற்றும் கேலக்ஸி M13 5ஜி ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் வருகிற ஜூலை மாதம் 14ந் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெக்சிகோவில் கடந்த மே மாதம் லான்ச் செய்யப்பட்ட M13 போன்களை விட இந்த போன் வித்தியாசமான தோற்றத்துடன் வருகிறது. இதில் இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது.

    M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. மேலும் இது பிளாக் மற்றும் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. இது கிரீன் மற்றும் புரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.


    M13 5ஜி ஸ்மார்ட்போனில் ரேம் ப்ளஸ் வசதியும் வழங்கப்பட உள்ளது. மேலும் இது 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் வரும் என்றும் டைமென்சிட்டி 700 புராசஸரை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் M13 4ஜி ஸ்மார்ட்போன் 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போன் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    ×