search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சியோமி போன்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரை விலை குறைப்பு - எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
    X

    சியோமி போன்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரை விலை குறைப்பு - எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?

    • சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
    • இவை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

    சியோமி 12 ப்ரோ, சியோமி 11T ப்ரோ மற்றும் ரெட்மி K50i 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சுதந்திர தினம் மற்றும் ராக்கி பண்டிகையை முன்னிட்டு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடி சியோமி 11 லைட் NE, ரெட்மி 10 பிரைம், ரெட்மி 10 பவர், ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகளை இன்று (ஆகஸ்ட் 06) துவங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பெற முடியும். சியோமி நடத்தும் சிறப்பு விற்பனை அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் உடன் நடைபெறுகிறது. இந்த விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.


    இந்திய சந்தையில் ரூ. 62 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 13 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி உடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி K50i 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரத்து 999 மற்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


    ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1,250 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதே போன்று ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை தற்போது ரூ. 20 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×