என் மலர்

  மொபைல்ஸ்

  இன்பினிட்டி பிளெக்ஸ் 120Hz AMOLED டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி Z ப்ளிப் 4 அறிமுகம்
  X

  இன்பினிட்டி பிளெக்ஸ் 120Hz AMOLED டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி Z ப்ளிப் 4 அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

  சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை ப்ளிப் போன், கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

  இத்துடன் 1.9 இன்ச் அளவில் எக்ஸ்டெர்னல்/கவர் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது நோட்டிபிகேஷன், மெசேஜ் உள்ளிட்ட விவரங்களை போனினை திறக்கமாலேயே பார்க்க வழி செய்கிறது. பிளெக்ஸ்கேம் அம்சத்தை ஆக்டிவேட் செய்து கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலில் க்ரூப் செல்பி அல்லது வீடியோக்களை படமாக்க முடியும்.


  புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி கேமரா 65 சதவீதம் வரை அதிக பிரகாசமான சென்சார் கொண்டுள்ளது.

  சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 அம்சங்கள்:

  - 6.7 இன்ச் FHD+ 2640x1080 பிக்சல் 21.9:9 டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே

  - எக்ஸ்டெர்னல் / கவர் 1.9 இன்ச் 512x260 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

  - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

  - 3.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

  - அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் GPU

  - 8 ஜிபி ரேம்

  - 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி

  - ஒரு இசிம், ஒரு நானோ சிம்

  - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1

  - 12MP பிரைமரி கேமரா, f/1.8, 1.8 μm, OIS

  - 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

  - 10MP செல்பி கேமரா, f/2.4

  - 5ஜி, 4ஜி, வைபை 6E 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2 LE

  - யுஎஸ்பி டைப் சி, என்எப்சி, ஜிபிஎஸ்

  - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)

  - யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கல், டால்பி அட்மோஸ்

  - 3700 எம்ஏஹெச் பேட்டரி

  - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங்

  - 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

  சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் புளூ, பின்க் கோல்டு, கிராபைட் மற்றும் போரா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 ஆயிரத்து 185 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 1,179.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 93 ஆயிரத்து 440 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  Next Story
  ×