என் மலர்
மொபைல்ஸ்
- ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் ஐகூ 9T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ E5 AMOLED பிளாட் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சமாக 1500 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் கேமிங் மற்றும் ரியல்-டைம் எக்ஸ்டிரீம் நைட் விஷன் வசதிக்காக வி1 பிளஸ் சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐகூ 9T ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஐகூ 9T அம்சங்கள்:
- 6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 19.8:9 ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
- 3.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
- அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் GPU
- 8 ஜிபி LPDDR5 6400Mbps ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- 12 ஜிபி LPDDR5 6400Mbps ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 23
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.75, OIS, எல்இடி பிளாஷ்
- 13MP 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 12MP போர்டிரெயிட் கேமரா, f/1.98
- 16MP செல்பி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹைபை ஆடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யுஎஸ்பி டைப் சி
- 4700 எம்ஏஹெச் பேட்டரி
- 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐகூ 9T ஸ்மார்ட்போன் ஆல்பா மற்றும் லெஜண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஐகூ மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் புது பிரிவுகளில் களமிறங்க ரியல்மி முடிவு செய்து இருக்கிறது.
இந்திய சந்தையில் எதிர்கால திட்டம் பற்றிய தகவல்களை ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதன் படி இந்தியாவில் குறைந்தபட்சம் நான்கு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும் நுகர்வோருக்காக புது பிரிவுகளில் களமிறங்கவும் ரியல்மி முடிவு செய்துள்ளது.
ரூ. 15 ஆயிரம் விலை பிரிவில் புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அந்த வகையில், ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் விலை பிரிவில் புது 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்திய சந்தையில் அடுத்த சில மாதங்களில் புதிய தலைமுறை கனெக்டிவிட்டி பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இதை பயனர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் குறைந்த விலை சாதனங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தவிர ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 10 சீரிஸ் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது பண்டிகை காலத்தை குறி வைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி நுகர்வோர் சாதனங்கள் சார்ந்து புதிதாக இரண்டு அல்லது மூன்று பிரிவுகளில் களமிறங்க ரியல்மி முடிவு செய்து இருக்கிறது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். சமீபத்தில் தான் ரியல்மி நிறுவனம் தனது முதலவ் மாணிட்டரை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாணிட்டர் ரியல்மி ஃபிளாட் மாணிட்டர் FHD என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
- சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 சீரிஸ் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.
- விரைவில் இந்தியா வரும் புது ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது.
ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி, நோட் 11T 5ஜி மற்றும் பல்வேறு மாடல்கள் நோட் 11 சீரிசில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், மற்றும் ஓர் ஸ்மார்ட்போனினை ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 SE எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிரபல டிப்ஸ்டரான கேபர் சிபெக் ரெட்ம் நோட் 11 SE பெயர் அடங்கிய புது மாடல் விவரங்களை MIUI குறியீடுகளில் கண்டறிந்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கானசது என்றும் இது சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

MIUI குறியீடுகளின் படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10S மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் சில நாடுகளில் போக்கோ M5S எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே தகவல்களை உண்மையாக்கும் வகையில், இந்த மாடல் விவரங்கள் பல்வேறு சான்று அளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.
தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ரெட்மி நோட் 11 SE மாடலில் ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்களே வழங்கப்படலாம். அந்த வகையில், இந்த மாடல் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G95 பிராசஸர், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வழங்கப்படும்.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த MIUI 13 கொண்டு இருக்கும்.
- இன்று முதல் நத்திங் போனை முன்பதிவு இன்று ப்ளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
- ஏராளமானோர் ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்து இந்த போனை வாங்கினர்.
நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் ஏராளமானோர் ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்து இந்த போனை வாங்கினர். முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த போன் கடந்த ஜூலை 21-ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முன்பதிவின்றி இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இன்று முதல் நத்திங் போனை முன்பதிவு இன்றி ப்ளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நத்திங் போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் டாப் எண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஃபிளாக்ஷிப்போனின் பெயர் மோட்டோ X30 ப்ரோ என பெயரிடப்பட்டு உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.
மோட்டோ நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஃபிளாக்ஷிப்போனின் பெயர் மோட்டோ X30 ப்ரோ என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் கேமரா தான் என கூறப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் 200 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 200 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமையை இந்த மோட்டோ X30 ப்ரோ பெற உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.73 இன்ச் pOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 4,500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரியும், 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.
- விவோ T1x ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது.
- இதுதவிர 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது.
விவோ நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இது தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசஸரை கொண்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் ஆகியவை பின்பகுதியில் இடம்பெற்றுள்ளன. முன்பகுதியில் வீடியோ கால் மற்றும் செல்பி எடுப்பதற்கு ஏதுவாக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதுதவிர 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிராவிட்டு பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய இருவித கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
விலையை பொறுத்தவரை விவோ T1x ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11 ஆயிரத்து 999 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12 ஆயிரத்து 999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் கிரெடிட் கார்டோ அல்லது டெபிட் கார்டோ பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- டூகி S89 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஆயிரம் எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப்பை கொண்டுள்ளது.
- டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.
டூகி நிறுவனம் அதன் வலிமை வாய்ந்த டூகி S89 ப்ரோ என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனை வலிமையான போன் என குறிப்பிடுவது ஏன் என்றால் இது கீழே விழுந்தாலும் உடையாதாம். அதுமட்டுமின்றி வாட்டர் ப்ரூஃப் கொண்ட போனாகவும் இது உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பு அதன் பேட்டரி தான். 12 ஆயிரம் எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் தாங்குமாம். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹிலியோ P90 புராசஸர் இதில் இடம்பெற்று உள்ளது. பேட்மேன் தீம் கொண்டு இந்த ஸ்மார்ட்போனை டிசைன் செய்துள்ளனர்.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் எல்.சி.டி ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 20 மெகாபிக்சல் நைட் ஷுட்டர், 8 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்று உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தற்போது அறிமுக சலுகையாக ரூ. 19 ஆயிரத்து 210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 29 வரை மட்டுமே இந்த சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அதன் பின்னர் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25 ஆயிரத்து 478-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் விலை ரூ.43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
விற்பனைக்கு வரும் முன் ரிவ்யூ செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு ரிவ்யூ செய்தவர்கள் ஏராளமானோர் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் குறிப்பிட்ட விரல்களில் உள்ள கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், அந்த விரலை பயன்படுத்தினால் மட்டுமே அந்த போனின் டிஸ்ப்ளே லாக் ஓபன் ஆகும். ஆனால் கூகுளின் இந்த ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்படாத விரலின் மூலமும் திறக்க முடிவதாக ரிவ்யூ செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சாஃப்ட்வேரில் உள்ள பிரச்சனையா அல்லது ஹார்ட்வேரில் உள்ள பிரச்சனையா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என ரிவ்யூவர்கள் தெரிவித்துள்ளனர். கூகுள் நிறுவனமும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் உள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் அது இந்த போனின் விற்பனையை பெரிதும் பாதிக்கக்கூடும். ஆதலால் விரைவில் கூகுள் நிறுவனம் இதற்கு தீர்வு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரியும் இடம்பெற்று உள்ளது.
- மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது.
டெக்னோ நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மாட்போனை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. டெக்னோ ஸ்பார்க் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் ரேம் தான். அதன்படி இந்தியாவில் முதன்முறையாக 11 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது வந்துள்ளது.
இதன் அம்சங்களை பொருத்தவரை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளே, பெரிய செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல், இரண்டு சென்சார் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மீடியாடெக் ஹீலியோ G37 ஆக்டாகோர் புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளது.

128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரியும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது.
இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9 ஆயிரத்து 999 எனவும், 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ஒன்பிளஸ் 10T டிரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் என கூறப்படுகிறது.
- அந்த ஸ்மார்ட்போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்களை இதுவரை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் 10T என்கிற 5ஜி மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் 3ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அம்சங்களை பொருத்தவரை இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதுகுறித்த மேலும் சில விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பின்புறம் 50 மெகாபிக்சன் மெயின் கேமராவும், 16 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கிறதாம். இந்த ஸ்மார்ட்போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் ஷிம்மர் பிளாக் மற்றும் ஷிம்மர் கோல்டு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
- இதன் விலை ரூ.29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஆகிய இரு மாடல் ஸ்மார்ட்போன்கள் இந்த சீரிஸில் இடம்பெற்று இருந்தன. இதில் ரெனோ 8 மாடல் மட்டும் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு ஹெச்.டி+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC புராசஸரை கொண்டுள்ளது. மேலும் இது ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. ரெனோ 8 மாடலில் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் இடம்பெற்று உள்ளது. இதன் விலை ரூ.29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஷிம்மர் பிளாக் மற்றும் ஷிம்மர் கோல்டு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி. ஐசிஐசிஐ, எஸ்.பி.ஐ., மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய கார்ட்களை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் ஒப்பொ ரெனோ 8 ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ தளங்களில் தொடங்கப்பட உள்ளது. ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 25-ந் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 4,700 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்டதாக இருக்குமாம்.
- இது 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.
ஐகூ நிறுவனம் இந்தியாவில் அதன் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து இருந்தது. அதன்படி 9 சீரிஸில் இதுவரை ஐகூ 9, ஐகூ 9 ப்ரோ, ஐகூ 9 SE ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ஐகூ 9T என பெயரிடப்பட்டுள்ள அந்த புது மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 SoC புராசஸரை கொண்டிருக்கும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவும் இதில் இடம்பெற்றுள்ளது. ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 4,700 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தகவல்படி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த போன் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் அமேசான் மற்றும் ஐகூவின் இ-ஸ்டோர்களிலும் விற்பனைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






