search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இந்திய முன்பதிவில் அசத்திய கேலக்ஸி Z ப்ளிப் மற்றும் Z போல்டு 4
    X

    இந்திய முன்பதிவில் அசத்திய கேலக்ஸி Z ப்ளிப் மற்றும் Z போல்டு 4

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 மாடல்கள் இந்திய முன்பதிவில் அசத்தி உள்ளன.
    • புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 89 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது புதிய கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு துவங்கியதும் எத்தனை பேர் இந்த ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்தனர் என்ற தகவலை சாம்சங் வெளியிட்டு உள்ளது.

    புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 மாடல்கள் முன்பதிவில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக சாம்சங் இந்தியா MX விற்பனை தலைவர் மற்றும் மூத்த துணை தலைவர் ராஜு புல்லன் தெரிவித்து இருக்கிறார். இத்தனை யூனிட்களும் முன்பதிவு துவங்கிய முதல் 12 மணி நேரத்தில் நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 1.5 மடங்கு அதிக அளவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக சாம்சங் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் சில்லறை விற்பனை மையங்களை விரிவுப்படுத்தி இருக்கிறது.


    விலை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி+ 256ஜிபி) ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999

    சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி+ 513ஜிபி) ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 999

    சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி+ 1 டிபி) ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 999

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ரூ. 89 ஆயிரத்து 999

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 பிஸ்போக் எடிஷன் ரூ. 97 ஆயிரத்து 999

    இரண்டு புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களும் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைத்தளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவை போரா பர்பில், கிராபைட், பின்க் கோல்டு, கிரே கிரீன், பேண்டம் பிளாக் மற்றும் பெய்க் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன.

    Next Story
    ×