என் மலர்
மொபைல்ஸ்

200MP சென்சாருடன் உருவாகும் கேலக்ஸி S23 அல்ட்ரா - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் ரெண்டர் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் புதிய நோட் - S சீரிஸ் ஹைப்ரிட் மாடல் கேலக்ஸி S23 அல்ட்ரா 200MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று தலைமுறை பிரீமியம் S சீரிஸ் மாடல்களில் சாம்சங் நிறுவனம் 108MP கேமராவையை வழங்கி வந்துள்ளது. இது தவிர சாம்சங் தனது 200MP சென்சாரை அறிவித்து சில காலம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், தனது 200MP சென்சாரை ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சாம்சங் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் யூனிட் தனது கேமரா உற்பத்தியாளரிடம் S23 அல்ட்ரா மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
சாம்சங் கடந்த ஆண்டு தனது முதல் 200MP ஸ்மார்ட்போன் கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது. பின் ஜூன் மாத வாக்கில் இதே சென்சாரின் மற்றொரு வெர்ஷனை அறிமுகம் செய்தது. சமீபத்தில் மோட்டோரோலா X30 ப்ரோ 200MP சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போதைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் சிறந்த கேமரா அம்சங்கள் நிறைந்த மாடலாக கேலக்ஸி S22 அல்ட்ரா விளங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ மாட்யுல், 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்ட்டு இருக்கிறது.
புதிய கேலக்ஸி S23 மாடல் முந்தைய மாடலில் உள்ளதை போன்ற டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கும் என்றும் இதன் அம்சங்கள் மென்பொருள் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.






