search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகமான விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன்
    X

    வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகமான விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன்

    • விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய V25 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 8ஜிபி வரையிலான எக்ஸ்டெண்டட் ரேம் கொண்டுள்ளது.

    விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய V25 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.55 இன்ச் FHD+ 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 120 Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 8 ஜிபி எக்ஸ்டெண்டட் ரேம் , பயோனிக் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4830 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.


    விவோ V25 ப்ரோ அம்சங்கள்:

    - 6.56 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    - 3GHz ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர்

    - ARM G77 MC9 GPU

    - 8ஜிபி LPDDR4x ரேம்

    - 128ஜிபி UFS 3.1 ரேம்

    - 12ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி

    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓஎஸ் 12

    - டூயல் சிம்

    - 64MP பிரைமரி கேமரா, f/1.89, OIS, LED பிளாஷ்

    - 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4

    - 32MP செல்பி கேமரா

    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    - யுஎஸ்பி டைப் சி

    - Dimensions: 158.9×73.52×8.62mm; Weight: 190g

    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

    - 4800 எம்ஏஹெச் பேட்டரி

    - 66 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன் பியுர் பிளாக் மற்றும் செய்லிங் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் முன்பதிவு இன்றே துவங்கி விட்டது. விற்பனை ஆகஸ்ட் 25 ஆம் தேதி ப்ளிப்கார்ட், விவோ வலைதளங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×