என் மலர்
மொபைல்ஸ்
- ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI ஒஎஸ் கொண்டிருக்கிறது.
ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.79 இன்ச் ஃபுல் HD+ 2400x1080 பிக்சல் IPS LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 12R ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார், மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 12R அம்சங்கள்:
6.79 இன்ச் ஃபுல் HD+ 2400x1080 பிக்சல் IPS LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ்
8 ஜிபி ரேம்
அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
2MP சென்சார், மேக்ரோ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
ஃபேஸ் அன்லாக் வசதி
IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஸ்கை ஃபேன்டசி மற்றும் டைம் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சீன சந்தையில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 300 என்று துவங்குகிறது.
- ரெட்மி 12 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்படுகிறது.
- புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
சியோமி நிறுவனம் விரைவில் தனது ரெட்மி 12 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் தான் இதே ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால், புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதுபற்றிய விவரங்கள் MIUI சர்வெரில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஒஎஸ் இந்திய பயனர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், மாலி G52 EEMC2 GPU வழங்கப்படுகிறது.
இத்துடன் 4 ஜிபி, 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- புதிய நார்சோ ஸ்மார்ட்போன்களிலும் மேட்ரிக்ஸ் கேமரா செட்டப் உள்ளது.
- நார்சோ 60 சீரிஸ் 5ஜி மாடலில் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படலாம்.
ரியல்மி நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து ரியல்மி நார்சோ 60 சீரிஸ் 5ஜி மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி ஜூலை 6-ம் தேதி நார்சோ 60 5ஜி மற்றும் நார்சோ 60 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. டீசர்களில் புதிய ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் எப்படி காட்சியளிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி புதிய நார்சோ 60 சீரிஸ் 5ஜி மாடல்களின் பின்புற தோற்றம் ரியல்மி 11 ப்ரோ சீரிசில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய நார்சோ ஸ்மார்ட்போன்களிலும் மேட்ரிக்ஸ் கேமரா செட்டப் உள்ளது. டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் 100MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் பின்புறம் வேகன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பேக் பேனல் மார்ஷியன் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே வெளியான டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் 61 டிகிரி வளைந்த டிஸ்ப்ளே, மத்தியில் பன்ச் ஹோல் கொண்டிருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. இத்துடன் அதிகபட்சம் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரியல்மி நார்சோ 60 5ஜி மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.
அதில் புதிய நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போன் RMX3750 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதும், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், 8 ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மற்ற நார்சோ போன்களை போன்றே நார்சோ 60 சீரிஸ் 5ஜி மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆன்லைன் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- ரெட்மி A2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் உள்ளது.
- புகைப்படங்களை எடுக்க டூயல் 13MP பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சியோமி நிறுவனம் கடந்த மாதம் ரெட்மி A2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி A2 மற்றும் A2 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 6 ஆயிரத்து 799 மற்றும் ரூ. 8 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரெட்மி A2 மற்றும் A2 பிளஸ் மாடல்களில் 6.52 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, HD+ 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, QCGA லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இரு மாடல்களிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி A2 சீரிஸ் மாடல்கள் சீ கிரீன், அக்வா புளூ மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் டிஸ்ப்ளே, ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் பாடி உள்ளது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் விரைவில் அறிமுகமாகிறது.
- புதிய சாதனங்களுக்கென ஒன்பிளஸ் நிறுவனம் பிர்தயேகமாக மைக்ரோசைட் உருவாக்கி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு CE3 5ஜி, ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மற்றும் புல்லட்ஸ் Z2 ANC இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு பட்ஸ் 2R மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு CE 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நார்டு 2 மற்றும் நார்டு CE 2 ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய சாதனங்களுக்கென ஒன்பிளஸ் நிறுவனம் பிர்தயேகமாக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் சாதனங்கள் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு CE 3 5ஜி மாடலின் பின்புறம் இரண்டு ரிங்குகள் உள்ளன. இவற்றில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அலர்ட் ஸ்லைடர் காணப்படுகிறது.
நார்டு CE 3 5ஜி மாடலின் மேல்புறம் ஐ.ஆர். பிலாஸ்டர் உள்ளது. நார்டு 3 5ஜி மாடல் டெம்பஸ்ட் கிரே மற்றும் மிஸ்டி கிரீன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. நார்டு CE 3 5ஜி மாடல் அக்வா சர்ஜ் நிறத்தில் கிடைக்கும். ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் டீப் கிரே மற்றும் டிரிபில் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
நார்டு பட்ஸ் 2 இயர்போன் அதன் முந்தைய மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 ANC மாடல் பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. பெயருக்கு ஏற்றார்போல் இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- நோக்கியா C12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏற்கனவே மூன்று வித நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
- நோக்கியா C12 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்ட்ரி லெவல் நோக்கியா C12 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய நிற வேரியண்டை அறிமுகம் செய்தது. முன்னதாக இதற்கான டீசர் மட்டும் வெளியான நிலையில், தற்போது ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை நோக்கியா C12 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், யுனிசாக் SC9863A1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா C12 ப்ரோ அம்சங்கள்:
6.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல் ரெசல்யூஷன்
யுனிசாக் SC9863A1 பிராசஸர்
2 ஜிபி, 3 ஜிபி, 4 ஜிபி ரேம்
2 ஜிபி விர்ச்சுவல் ரேம்
64 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ்
8MP பிரைமரி கேமரா
5MP செல்ஃபி கேமரா
வைபை, ப்ளூடூத்
எப்எம் ரேடியோ
ஃபேஸ் அன்லாக்
3.5mm ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
4000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய நோக்கியா C12 ப்ரோ மாடலின் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என்றும், 3 ஜிபி மற்றும் 4 ஜிபி மெமரி மாடல்கள் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை சமீபத்தில் துவங்கியது.
- ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த நார்டு ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டீசரில் ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. டீசரில் ஃபாஸ்ட் அன்ட் ஸ்மூத் (Fast and Smooth) எனும் வாசகம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை துவங்கியது. இதில் தேர்வு செய்யப்படுவோர் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி, அதனை ரிவ்யூ செய்ய முடியும்.

இதுதவிர ஒன்பிளஸ் வலைதளத்தில் பிரத்யேக போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று (ஜூன் 23) துவங்கிய சிறப்பு போட்டிகள் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புதிய நார்டு பட்ஸ் 2R மாடல் அறிமுகமாகும் ஜூலை 5-ம் தேதியே புதிய நார்டு 3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம்.
டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படும் என்றும் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான ரென்டர்களில் இந்த ஸ்மார்ட்போன் கிரே நிறம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுதவிர புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஏஸ் 2V ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் தான் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே, இந்த மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- சாம்சங் நிறுவனம் புதிய கேல்கஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டது.
- புதிய கேலக்ஸி M34 5ஜி மாடல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர்களின் கீழ்புறமாக கைரேகை சென்சார் இருப்பது காணப்படுகிறது.
இதே போன்ற செட்டப் கேலக்ஸி M33 5ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் M34 5ஜி மாடலில் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் அருகிலேயே ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் SM-M346B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது தவிர சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் லிஸ்டிங்கில் அம்பலமானது. இந்த மாடல் SM-E346B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேல்கஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் வெளியீடு ஜூலை மாத வாக்கில் நடைபெறும் என்றும் விலை ரூ. 20 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
- விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டுள்ளது.
- விவோ Y36 மாடலில் 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ Y36 ஸ்மார்ட்போனில் 6.64 இன்ச் FHD+ 90Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் பேக் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ Y36 அம்சங்கள்:
6.64 இன்ச் 2388x1080 பிக்சல் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
அட்ரினோ 610 GPU
8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்
2MP டெப்த் கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
IP54 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விவரங்கள்:
விவோ Y36 ஸ்மார்ட்போன் வைப்ரன்ட் கோல்டு மற்றும் மீடியோர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை விவோ இந்தியா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- சாம்சங் கேல்கஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது நான்கு நிறங்ளில் கிடைக்கிறது.
- கேலக்ஸி S23 அல்ட்ரா புதிய நிற வேரியண்ட்கள் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்ஷிப் மாடல் முதன் முதலில் ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் நிற ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் ரெட் மற்றும் லைட் புளூ என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய நிற வேரியண்ட்களின் விலையும் அதன் மற்ற நிறங்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய லைட் புளூ மற்றும் ரெட் நிற வேரியண்ட்கள் சாம்சங் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஸ்டோர்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் என மூன்று நிற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும். கேலக்ஸி S23 அல்ட்ரா 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா அம்சங்கள்:
6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ GPU
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 1 டிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1
IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
200MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேமரா
10MP டெலிபோட்டோ லென்ஸ்
10MP டெலிபோட்டோ லென்ஸ்
12MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி போர்ட்
- முதல் நாள் விற்பனையில் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.
- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 27 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.
ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன் இதன் விற்பனை துவங்கிய நிலையில், முதல் நாளிலேயே 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல்மி அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், விற்பனை துவங்கிய முதல் ஐந்து நாட்களில் ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. அறிமுகமானதில் இருந்தே ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் அதிக பிரபலம் அடைந்து வருகிறது.

இதன் காரணமாக ரியல்மி ஏற்கனவே படைத்த சாதனங்களை அந்நிறுவனம் தற்போது முறியடித்து வருகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதன் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தவிர அனைத்து அம்சங்களும் ரியல்மி 11 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி 11 ப்ரோ மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனையும் ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- சர்வதேச சந்தையில் நத்திங் போன் 2 மாடல் அடுத்த மாதம் அறிமுகமாகிறது.
- நத்திங் போன் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலின் சிப்செட், டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் போன்ற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலின் யுஎஸ்பி டைப் சி கேபிள் எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி நத்திங் போன் 2 மாடலுடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், நத்திங் போன் 1 உடன் வழங்கப்பட்டதை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நத்திங் போன் 2 உடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், சில்வர் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு, வெளிப்புறம் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

டைப் சி கேபிள் நத்திங் பிரான்டிங் கொண்டிருக்கிறது. கேபிள் நிறம் வெள்ளை நிறத்தில் உள்ளது. நத்திங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று தெரிகிறது. நத்திங் நிறுவனம் 45 வாட் சார்ஜரை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்கிறது.
நத்திங் போன் 1 மாடலில் அதிகபட்சம் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-க்கான சப்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நத்திங் போன் மாடலில் எவ்வளவு சார்ஜிங் வேகம் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.






