search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    50MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    50MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
    • விவோ Y27 மாடலில் டூயல் ரிங் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

    விவோ நிறுவனத்தின் Y27 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய விவோ Y27 மாடலில் 6.64 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் ரிங் டிசைன் கொண்டிருக்கும் விவோ Y27 மாடல் பர்கன்டி பிளாக் மற்றும் ரெட் அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    விவோ Y27 அம்சங்கள்:

    6.64 இன்ச் 2388x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்

    ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்

    மாலி G52 2EEMC2 GPU

    6 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய விவோ Y27 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×