என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்

ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி.. நத்திங் போன் 2 இந்திய விற்பனை துவக்கம்..!

- நத்திங் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்தியாவில் நத்திங் போன் 2 மாடல் மூன்று வேரியன்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
நத்திங் போன் 2 மாடலின் ஒபன் சேல் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 21) மதியம் 12 மணிக்கு விற்பனை துவங்கிய நிலையில், பயனர்கள் புதிய நத்திங் போன் 2 மாடலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வாங்கிட முடியும். நத்திங் போன் 2 மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் 2 விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 மாடலை விட ரூ. 5 ஆயிரம் வரை அதிகம் ஆகும். நத்திங் போன் 2 மாடல் அதன் பிளாக்ஷிப் அம்சங்களுடன் கிடைக்கும் விலையே அதிகம் என்று நினைக்கின்றீர்களா? நத்திங் போன் 2 மாடலை இதைவிட குறைந்த விலையில் வாங்கிட முடியும்.
நத்திங் போன் 2 மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை மற்றும் வங்கி சலுகைகளை கொண்டு அதன் விலையை ஓரளவுக்கு குறைத்திட முடியும். நத்திங் போன் 2 மாடலின் பேஸ் வேரியன்ட் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ. 44 ஆயிரத்து 999, ரூ. 49 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 54 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வாங்குவோர் சிட்டி, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி பெற முடியும்.
இத்துடன் ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம். இரு சலுகைகளை சேர்க்கும் பட்சத்தில் நத்திங் போன் 2 மாடலின் பேஸ் வேரியன்ட் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்று மாறிவிடும். இதே சலுகைகள் மற்ற இரண்டு வேரியன்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.
நத்திங் போன் 2 அம்சங்கள்:
6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ OLED 1-120 Hz LTPO ஸ்கிரீன்
அதிகபட்சம் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
50MP 114 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 4cm மேக்ரோ ஆப்ஷன்
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
4700 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
