என் மலர்
மொபைல்ஸ்
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றன.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் E4 AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 20 எம்பி செல்பி கேமரா மிக சிறிய பன்ச் ஹோலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
எம்ஐ 11 எக்ஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. எம்ஐ 11 எக்ஸ் மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் 8 எம்பி அல்ட்ரா வைடு 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4520 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடல்கள் செலஸ்டியல் சில்வர் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. எம்ஐ 11 எக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 29,999, 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,999 என்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 39,999, 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய டிமென்சிட்டி 1200 5ஜி மொபைல் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மீடியாடெக் நிறுவனம் தனது டிமென்சிட்டி 1200 பிராசஸரை அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இந்த பிராசஸர் இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து புதிய மீடியாடெக் பிராசஸர் ரியல்மி ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்படுகிறது.
இதனை ரியல்மி டீசர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும்.

புதிய மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது 3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் ஆக்டா-கோர் சிபியுக்களை கொண்டுள்ளது. இது முந்தைய தலைமுறை பிராசஸரை விட 22 சதவீதம் அதிவேக சிபியு திறன் வழங்கும்.
இதனுடன் ARM மாலி - G77 MC9 GPU, 6 கோர் மீடியாடெக் APU 3.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஏஐ அம்சங்கள், அசத்தலான டிஸ்ப்ளே, அதிவேக ரிப்ரெஷ் ரேட், கேமிங் என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடல் அளவில் சிறியதாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. மூன்றாம் தலைமுறை மாடல் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கேலக்ஸி இசட் போல்டு 3 விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய இசட் போல்டு 3 முந்தைய மாடலை விட அளவில் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 5.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. முந்தைய மாடலில் 6.3 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஆர்மர் பிரேம் டைட்டானியம் அல்லது கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. இரு பொருட்களும் அலுமினியம் மற்றும் ஸ்டீலை விட எடை குறைவாக இருப்பவை ஆகும். மற்ற அம்சங்களை பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், எஸ் பென் வசதி வழங்கப்படலாம்.
கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் எஸ் பென் சப்போர்ட் வழங்குவதற்கு தேவையான பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எஸ் பென் வழங்கப்படுவதால், புது கேலக்ஸி நோட் பேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் ஏ74 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 90 ஹெர்ட்ஸ் ஹைப்பர் கலர் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 6 ஜிபி ரேம், கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி மோனோ கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

ஒப்போ ஏ74 5ஜி அம்சங்கள்
- 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 90Hz ஹைப்பர் கலர் ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, PDAF, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த்
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் புளூயிட் பிளாக், பேண்டேஸ்டிக் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன் மே 1 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களில் 6.8 இன்ச் மேக்ஸ் விஷன் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போபவர் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஜி60 மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி40 பியூஷன் 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோ ஜி60 மற்றும் ஜி40 பியூஷன் அம்சங்கள்
- 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ 120Hz ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி (ஜி40 பியூஷன்)
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஜி60 – 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.7, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- ஜி40 பியூஷன் – 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 32 எம்பி செல்பி கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா - ஜி40 பியூஷன்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்
மோட்டோ ஜி60 மற்றும் ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் டைனமிக் கிரே மற்றும் பிராஸ்டெட் ஷேம்பெயின் நிறங்களில் கிடைக்கிறது. மோட்டோ ஜி60 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி துவங்குகிறது.
மோட்டோ ஜி40 பியூஷன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ3 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி கியூ3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 22 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ரியல்மி கியூ3 மாடலும் இதே நிகழ்வில் அறிமுகமாகும் என தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி கியூ3 ப்ரோ மாடல் திரையின் ஓரத்தில் பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது. பின்புற பேனல் மேட் பினிஷ் மற்றும் ‘Dare to Leap’ பிராண்டிங் வழங்கப்படுகிறது. செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யூலில் மூன்று சென்சார்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது.
இத்துடன் 6.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் சிம் ஸ்லாட், மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர், கைரேகை சென்சார், 4400 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் முதல் பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் இது ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என சாம்சங் அறிவித்து இருந்தது.

தற்போதைய தகவல்களின்படி கேலக்ஸி எம்42 5ஜி மாடலில் குவாட் கேமரா சென்சார்கள், இன்பினிட்டி யு ஸ்கிரீன், நாக்ஸ் செக்யூரிட்டி, குவிக் ஸ்விட்ச், சாம்சங் பே போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி ஏ42 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒப்போ ஏ74 5ஜி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வெளியாகி இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ74 5ஜி மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 11.1 வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
விலையை பொருத்தவரை ஒப்போ ஏ74 5ஜி மாடல் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. தாய்லாந்தில் இந்த மாடல் இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்திற்கு வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அந்த பிராசஸர் கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனினை ரியல்மி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எனினும், இந்த மாடல் பற்றி எந்த தகவலும் இல்லை. பெரும்பாலும் இது ரியல்மி 8 5ஜி மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் ரியல்மி 8 5ஜி விவரங்கள் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 800 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.
போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் மற்றும் அமெரிக்காவின் எப்சிசி வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருப்பதால், இந்த மாடலின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எப்சிசி வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 5ஜி வேரியண்டின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 20எக்ஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

தற்போதைய தகவல்களின் படி போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் மற்றும் எப்சிசி வலைதளங்களில் முறையே M2103K19PI மற்றும் M2103K19PG மாடல் நம்பர்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் M2103K19PG மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 10 5ஜி மாடலுடன் ஒற்றுப்போவதாக கூறப்படுகிறது.
எப்சிசி வலைதள விவரங்களின் படி இரு மாடல்களிலும் பெருமளவு வித்தியாசங்கள் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலில் 22 வாட் பாஸ்ட் சார்ஜிங், எம்ஐயுஐ 12 மற்றும் ப்ளூடூத் 5.1 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
ஐகூ 7 சீரிஸ் இந்திய வெளியீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், தற்போது ஐகூ 7 லெஜண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய ஐகூ 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐகூ 7 லெஜண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஐகூ 7 மாடலிலும் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஸ்னாப்டிராகன் 870 பிராசஸராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு மாடல்களுடன் ஐகூ நியோ 5 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என ஐகூ ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஐகூ 7 மாடல் விலை மேலும் குறைவாகவே இருக்கும். ஐகூ 7 சீரிஸ் மாடல்கள் கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் விவோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
எல்ஜி நிறுவனத்தின் சுழலும் திரை கொண்ட விங் ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் அதிரடி சலுகையை வழங்குகிறது.
எல்ஜி விங் ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 40 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி துவங்கும் சிறப்பு பிளாக்ஷிப் பெஸ்ட் விற்பனையில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இது ஏப்ரல் 15 வரை வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ. 69,990 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி விங் ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் அம்சங்கள் மற்றும் வித்தியாசமான சுழலும் டிசைன் கொண்டுள்ளது.

எல்ஜி விங் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999 என ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் Notify Me ஆப்ஷன் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது ஏற்கனவே விற்று தீர்ந்து இருக்கும் என்றே தெரிகிறது.
எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.






