என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஐபோன் 13 சீரிஸ் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரென்டர் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவில் புது ஐபோன் எவ்வாறு காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    வீடியோவின் படி ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் சிறிய நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. இயர்பீஸ் டாப் பெசல் பகுதியில் மாற்றப்பட்டதால் பெசல் சிறியதாகி இருக்கிறது. பேஸ் ஐடி அம்சத்திற்கான சென்சார்கள் சிறு நாட்ச் இருக்கும் பகுதியிலேயே பொருத்தப்படுகிறது.

     ஐபோன்

    ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிய கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரென்டர் மாடல் கிராபைட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஆன்டெனா பேண்ட் நிறம் மாற்றப்பட்டு இருக்கிறது. இது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கிறது.

    மற்ற  அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் LTPO 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5ஜி வசதி, மேம்பட்ட கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், பெரிய பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.
    கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கென சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த பிராசஸர் வைட்சேப்பல் அல்லது GS101 என அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் GS101 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அல்ட்ரா-வைடு-பேண்ட் தொழில்நுட்பம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. GS101 என்பது கூகுள் உருவாக்கும் பிரத்யேக மொபைல் பிராசஸர் ஆகும்.

     பிக்சல் ஸ்மார்ட்போன்

    இது அடுத்த பிக்சல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிராசஸர் கொண்டு இரண்டு ஸ்மார்ட்போன்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இவை ரேவென் மற்றும் ஒரியோல் என அழைக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு 12 தளத்தில் உள்ள பில்ட்-இன் ஏபிஐ அல்ட்ரா-வைடு-பேண்ட் தொழில்நுட்பத்திற்கான வசதி கொண்டுள்ளது.

    ஆப்பிள் ஏர்டேக் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டேக் போன்ற டிராக்கர்ளிலும் இதேபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சந்தையில் இரு முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது சொந்த டிராக்கரை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
    ப்ளிப்கார்ட் தளத்தில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போனின் விலை மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு வேரியண்ட்களின் புது விலை ப்ளிப்கார்ட் தளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பின் படி ஒப்போ ஏ53 4ஜிபி+64ஜிபி விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 10,990 என மாறி இருக்கிறது. ஒப்போ ஏ53 6ஜிபி+128ஜிபி மாடல் விலை ரூ. 2500 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,990 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் பிளாக், பேரி வைட் மற்றும் பேன்சி புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

     ஒப்போ ஏ53

    ஒப்போ ஏ53 அம்சங்கள்

    - 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
    - 4ஜிபி, 6 ஜிபி ரேம்
    - 64ஜிபி, 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார்
    - 16 எம்பி செல்பி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்தியாவின் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் இந்தியாவின் பிஐஎஸ் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்திலும் இடம்பெற்று இருந்தது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    புது சாம்சங் ஸ்மார்ட்போன் SM-M325F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. தற்போது மாடல் நம்பர் தவிர இந்த ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 3.0, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 4ஜி வேரியண்டில் மட்டும் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம். 
    விவோ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    விவோ x60t ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. விவோ x60, x60 ப்ரோ மற்றும் x60 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் புது விவோ ஸ்மார்ட்போன் இணைந்துள்ளது.

    புதிய விவோ x60 ஸ்மார்ட்போன் V2120A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

     கோப்புப்படம்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை விவோ x60t மாடலில் 6.59 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 1100 5ஜி பிராசஸர், டூயல் சிம் ஸ்லாட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 1.0 வழங்கப்படும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 13 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 4300 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வைபை 6, ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது.


    சாம்சங் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவல்களின்படி இந்த மாடல் கேலக்ஸி எம்32 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. புது சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-M325F எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    கேலக்ஸி எம்32 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
    - ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் கேமரா
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிசை ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்களில் அறிமுகம் செய்தது.


    சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது ரெட்மி நோட் 10 விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வின் படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,499 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் முறையே ரூ. 11,999 மற்றும் ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், பிராஸ்ட் வைட் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இந்த மாடலை வாங்குவோருக்கு சிறப்பு எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

     ரெட்மி நோட் 10

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12, 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
    ரூ. 19 ஆயிரம் சிறப்பு விலையில் சாம்சங் நிறுவனத்தின் புது 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது 6.6 இன்ச் சூப்பர் AMOLED இன்பினிட்டி யு ஹெச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11  சார்ந்த ஒன் யுஐ 3.1 கொண்டிருக்கும் கேலக்ஸி எம்42 5ஜி புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி

    சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.6 இன்ச் ஹெச்டி+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் சென்சார்
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - சாம்சங் பே 
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி 
    - 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் ப்ரிசம் டாட் பிளாக், ப்ரிசம் டாட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் இதர சாதனங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.


    ரியல்மி இந்தியா மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் மிகப்பெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மே 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     ரியல்மி

    இத்துடன் டால்பி விஷன் மற்றும் ஆடியோ, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட புது ஸ்மார்ட் டிவியும் இந்த நிகழ்வில் அறிமுகமாகிறது. மேலும் இந்த ஆண்டின் இந்தியாவில் அறிமுகமாகும் சாதனங்களில் பாதி 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும். 

    ரூ. 20 ஆயிரத்திற்கும் அதிக விலையில் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி வழங்கப்படும். இதோடு குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் ரியல்மி திட்டமிட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஒப்போ நிறுவனத்தின் புது பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் மே 2 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.


    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஏ53எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கலர் ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

     ஒப்போ ஏ53எஸ் 5ஜி

    ஒப்போ ஏ53எஸ் 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி 

    ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ மற்றும் இன்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,990 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,990 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் மே 2 ஆம் தேதி துவங்குகிறது.
    ஐகூ நிறுவனத்தின் ஐகூ 7 5ஜி மற்றும் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
     

    ஐகூ நிறுவனம் ஐகூ 7 5ஜி மற்றும் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.62 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 5ஜி SA/NSA, லிக்விட் கூலிங் சிஸ்டம், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ  டெப்த் சென்சார், 16 எம்பி பன்ச்-ஹோல் செல்பி கேமரா, 4400 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ 7 5ஜி சாலிட் ஐஸ் புளூ மற்றும் ஸ்டாம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,990, 8 ஜிபி + 256 ஜிபி ரூ. 33,990 மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி ரூ. 35,990 ஆகும்.

    ஐகூ 7 லெஜண்ட் 6.62 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11.1, 5ஜி SA/NSA, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் சூப்பர் பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, 16 எம்பி பன்ச்-ஹோல் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ 7 லெஜண்ட் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 39,990, 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 43,990 ஆகும். இரு ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது. 
    அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக சென்போன் 8 மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இந்த ஆண்டு சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

     அசுஸ் சென்போன்

    கீக்பென்ச் விவரங்களின் படி அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ASUS_1004D எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. மேலும் இரு மாடல்களும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.

    ×