search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டேட் வங்கி"

    • குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    • பிற வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி சமீபத்தில் உயர்த்தியது.

    இதையடுத்து ஸ்டேட் வங்கி அனைத்து வகை கடன்களுக்கான வட்டியை 0.1 சதவீதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் என பல்வேறு வகை கடன்களுக்கான வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிற வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்சை கருணை நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
    • பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் நேரில் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஞ்சிலுவை சங்கம் பயன்பாட்டிற்காக ஆம்புலன்சை செஞ்சிலுவை சங்கம் தலைவரும் மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், தஞ்சாவூர் பாரத் ஸ்டேட் வங்கியின் சமூக கூட்டாண்மை சார்பில் பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் நேரில் வழங்கினார்.இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் தஞ்சாவூர் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்துக்கு தஞ்சாவூர் பாரத் ஸ்டேட் வங்கி சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதி மூலமாக ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்சை கருணை நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா , ஸ்ரீகாந்த் , பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொது மேலாளர் நவீன் குமார், உதவி பொது மேலாளர் ஆல்வின் மார்டின் ஜோசப் ஆல்பர்ட், செஞ்சிலுவை சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×