search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்ப மரம்"

    • வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    • தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் சாலை ஓரத்தில் பழமையான வேப்ப மரம் ஒன்று உள்ளது.

    இந்த வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் அதை செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் அந்த வேப்ப மரத்தை சுற்றி மஞ்சள் தெளித்து வேப்பமரம் முழுவதும் சந்தனத்தை பூசி அதில் குங்குமமும் வைத்து பத்தி, கற்பூரம் ஏற்றி அதை பக்தியுடன் வழிபட தொடங்கினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
    • வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில், கோபால் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் பால் போன்ற திரவம் இன்று காலை முதல் வெளி வந்தது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக சென்று வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை வியப்புடன் கண்டு வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை அந்தப் பகுதி மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

    மேலும் இதனை அறிந்த சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வந்து வேப்பமரத்தை வழிபட்டு, பாலை பிடித்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. 

    ×