search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு இடிந்து"

    கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் மழை பரவலாக பெய்தது. அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேலம்:

    கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்தது. இதில் தம்மம்பட்டி, வீரகனூர், ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் ஆத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோழப்பயிர்கள் தரையில் சாய்ந்தது. மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டியை சேர்ந்த சின்னப்பையன். இவரது மனைவி சந்திரா (வயது 42). இவர்களது மகள் சத்யா (29)வுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் பி.இ.படித்து வருகிறார்.

    சந்திரா நேற்றிரவு வீட்டருகே தென்னங்கீற்று முடையும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த சாரல் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சந்திராவின் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலம் ஆர்.டி.ஒ.(பொறுப்பு) ஜெகநாதன் மற்றும் வருவாய் துறையினர் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 97 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 41, ஆத்தூர் 28, கெங்கவல்லி 27, ஆனைமடுவு 23, பெத்தநாயக்கன் பாளையம் 22, ஏற்காடு, கரிய கோவிலில் 20.2, சங்ககிரி 19, மேட்டூர் 14.6, காடையாம்பட்டி 12, ஓமலூர் 11, எடப்பாடி 8.6, சேலம் 6.9, வாழப்பாடி 2.5 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 353 மி.மீ. மழை பெய்துள்ளது.
    திருமங்கலம் அருகே கனமழை காரணமாக 2 வீடுகள் இடிந்து விழுந்தன. #Rain

    பேரையூர்:

    மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு சில இடங்களில் பரவலாக லேசான முதல் கனமழை பெய்தது. திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது.

    வில்லூர் அருகே உள்ள சித்தூர் கிராமத்தில் மழை காரணமாக தங்கையா என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்தது. வெளிபுறமாக விழுந்ததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.

    அதேபோல் அருகில் உள்ள சுந்தரராஜ் என்பவரது வீட்டின் சுவரும் சரிந்தது. இதில் சுந்தரராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த கள்ளிக்குடி வட்டாட்சியர் ஆனந்தவள்ளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். #Rain

    வால்பாறையில் கன மழைக்கு வீடு இடிந்து பெண் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #Rain

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 7 -ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று 6-வது நாளாக மழை நீடிக்கிறது.

    கனமழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தும், மண்சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் உள்ள மல்லிகா என்பவரின் வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த மல்லிகாவின் சகோதரி உமா மீது ஓடுகள் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மழை மற்றும் சூறை காற்று காரணமாக தேயிலைத் தோட்ட பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் ஒரு சில எஸ்டேட் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். #Rain

    ×