search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை செய்த"

    • போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
    • இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.பி.பி. நகரில் போதை மாத்திரை விற்ப னை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. தகவலின் பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீ சார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது ஈ.பி.பி. நகர் நால்ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 வாலிபர்கள் நின்று கொ ண்டிருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்க ம்பாளையத்தை வசந்த் (26), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம்(26), ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த அமீர் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு பச்சப்பாளி பகுதியில் முகமது சித்திக் என்பவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதி அவரிடம் வாங்க வற்புறுத்தினார்.

    இதை வாங்க விருப்பம் இல்லாத அவர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் பச்சப்பாளியை சேர்ந்த மாரிசாமி என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் தொட்டிபாளையத்தை சேர்ந்த லோகநாதன் (26) என்பவர் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி விற்பனை செய்ய வைத்து இருந்தார்.

    இதையடுத்து சித்தோடு போலீசார் அவரை பிடித்து விசாரித்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சித்தோடு அடுத்த ஆர்.என். புதூர் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து விற்பனை செய்த ஜெகதீசன் (37) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மரப்பாலம் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய வைத்து இருந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த சத்தியசீலன் (73), சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த சிவா (42) என தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 160 மதிப்புள்ள 90 லாட்டரி சீட்டுகள் ரூ.20 ஆயிரத்து 500 பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்து இருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (49) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அவரிடம் இருந்து ரூ.480 மதிப்புள்ள 12 லாட்டரி சீட்டுகள், ரூ.17 ஆயிரத்து 700 பணம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரேஷன் கடையில் இருப்பு பரிசோதனை அதிகாரி நர்மதா ஆய்வு செய்தார்.
    • 147 பாக்கெட் பாமாயில் இருப்பில் குறைந்துள்ளது.

    சென்னிமலை, ஏப். 26-

    சென்னிமலை டவுன் அப்பாய்செட்டி வீதியில் அம்மாபாளையம் பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.

    இந்த வங்கியின் சார்பாக சென்னிமலை டவுன் பசுவபட்டி, ராமலிங்கபுரம், எக்கட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இதில் சென்னிமலை டவுன் அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் விற்பனையாளராக சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இந்த ரேஷன் கடையில் சம்பவத்தன்று இருப்புகளை சரிபார்க்க இருப்பு பரிசோதனை அதிகாரி நர்மதா நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் இருப்புக்களை ஆய்வு செய்த போது 147 பாக்கெட் பாமாயில் இருப்பில் குறைந்துள்ளது.

    அப்போது பாமாயில் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு வழங்காமல் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அம்மாபாளையம் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சந்திரன் என்ற விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் இது குறித்து துணைப்பதிவாளர் தலைமையில் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் முழுமையான இருப்பு பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
    • பின்னர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே கோட்டபாளையம் குளியங்காட்டு தோட்டம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வருவதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ரபி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் (42) என்பதும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 8 லிட்டர் சாராயம், 200 லிட்டர் சாராய ஊறல், ஊறல் போட பயன்படுத்திய டிரம், குடம், பாத்திரம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.3200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் செந்தில் மீது ஏற்கனவே சாராயம் காய்ச்சிய வழக்கு மற்றும் நாட்டுது ப்பா க்கி வைத்தி ருந்த வழக்கும் உள்ளது குறிப்பி டத்தக்கது.

    • போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
    • அந்த கடையில் பரமசிவம் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த கடையில் பரமசிவம் (68) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கடையில் இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் பரமசிவத்தை கைது செய்தார்.

    • ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் ஒரு காட்டேஜில் விற்பனைக்கு வைத்திருந்த 14 மது பாட்டில்கள் மற்றொரு காட்டேஜில் இருந்து 3 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது அருந்த அனு மதித்த ஜெயபாலன (68), ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

    இதே போல் ஆசனூர் அருகே உள்ள காட்டே ஜ்களில் மது அருந்த அனு மதித்த ஆசனூர் பகுதியை சேர்ந்த ராஜா (23), பெரியசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மலையம்பாளை யம் அருகே உள்ள வேலம் பாளையம் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்தார். போலீசார் அவரி டம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அடுத்த சீனாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை எதிரில் ஒருவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் அவர் கிருஷ்ண கிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (31) என்றும், அவர் அதிக விலைக்கு டாஸ்மாக் மதுவை விற்ப னை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு 16 ரோடு பகுதி யில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் களை விற்பனை செய்ய கொண்டு சென்றார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு அதியமான் நகரை சேர்ந்த சீனிவாசன் (50) என்றும் அவர் மது பானத்தை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அருகே உள்ள காளியம்புதூர் பகுதியில் பழனிசாமி (72) என்பவர் டாஸ்மாக் மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தார். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அருகே உள்ள வரபாளையம் அடுத்த அழகம்பாளையம் பகுதியில் வெள்ளியங்கிரி (42) என்பவர் மது பானத்தை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மலையம்பாளையம் அடுத்த குள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பாவா மொய்தீன் (50) என்பவர் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று பெட்டி கடை யில் சோதனை நடத்தி அங்கு இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த னர்.

    ஈரோடு நாடார் மேடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் லாட்டரி சீட்டு களின் எண்களை வெள்ளை தாளில் எழுதி விற்பனை ெசய்து ெகாண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்த முத்துகிரு ஷ்ணன் (38) என்பவர் 19 ரோடு நாச்சி பாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 36 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரத்து 10-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    இதில் அவர்கள் சாவடி ப்பாளையம் புதூர், அம்மன் நகர் பகுதி யை சேர்ந்த வடிவேல் என்கிற துரை (49). ஆலங்காட்டுவலசு நேரு வீதியை சேர்ந்த செந்தில்குமார் (40) எனவும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து 53 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தகர். மேலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பவானி போலீசார் சென்று சோதனை மேற்கொ ண்டனர். அப்போது போத்தநாயக்கன்புதூர் சுடுகாடு அருகில் உள்ள முட்புதர் பகுதியில் சாக்கு மூட்டையில் விற்பனை செய்ய பிராந்தி மற்றும் பீர் பாட்டில்களை வாலிபர் ஒருவர் வைத்து இருந்தது தெரியவந்தது.‌

    அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு சூரம்பட்டி வலசு, பாண்டியன் வீதியை சேர்ந்த பிரபு (25) என்பதும், சமையல் வேலை செய்து வரும் இவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×