வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது

போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு ஈ.பி.பி. நகரில் போதை மாத்திரை விற்ப னை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. தகவலின் பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீ சார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஈ.பி.பி. நகர் நால்ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 வாலிபர்கள் நின்று கொ ண்டிருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்க ம்பாளையத்தை வசந்த் (26), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம்(26), ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த அமீர் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com