search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதி பலி"

    • அந்த வழியாக வந்த லாரியின் பின்னால் மொபட்டை சீனப்பா ஓட்டி சென்றார்.
    • திடீரென்று ஒரு வளை–வில் திரும்பும் போது லாரியின் பின்னால், மொபட் மோதி விபத்துக்கு உள்ளானது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனப்பா (வயது70).

    தொழிலாளியான இவர் நேற்று தனது மொபட்டில் ஓசூர்-பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் பின்னால் மொபட்டை சீனப்பா ஓட்டி சென்றார்.

    திடீரென்று ஒரு வளைவில் திரும்பும் போது லாரியின் பின்னால், மொபட் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த சீனப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிரே வந்த லாரி கார்த்திகேயன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது.
    • தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது23). இவர் கோனோரிபள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று பேகேப்பள்ளி-உத்தனப்பள்ளி சாலை வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி கார்த்திகேயன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது.

    கடலூர்:

    சிதம்பரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார். புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த வாலிபர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இவர் புவனகிரி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை செய்வதும் தெரியவந்தது. இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக நடந்திருப்பது தெரியவந்தது. 

    • பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை புளியங்கன்னு பகுதியை சேர்ந்தவர்கள் மாதவன் (வயது 45), ஈஸ்வரன் (46). இவர்கள் இருவரும் பைக்கில் ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    திருத்தணி சாலையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.

    இதில் ' இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாதவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈஸ்வரன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இழப்பீடு கேட்டு போலீஸ் நிலையம் முற்றுகை
    • சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

    சோளிங்கர்:

    சோளிங்கர் அருகே பைக்கும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பைக் ஓட்டி வந்த விவசாயி பலியானார் . அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சோளிங்கர் போலீஸ் நிலையத்ததை முற்றுகையிட்டனர்.

    சோளிங்கர் அடுத்த அப்துல்லா புரம் கிராமத்தை சேர்ந்தவர் முனு சாமி (56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஜம்புகுளம் கிராமத்தில் மாட்டுத்தீவனம் வாங்கிக்கொண்டு பைக்கில் திரும்பி வந்து கொண்டி ருந்தார் . கேசவனாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த மினி வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் பைக்கில் வந்த முனுசாமி படுகாயமடைந்து அதே இடத்தில் பலியானார்.

    தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக் விபத்தில் பலியான முனுசாமி குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு சோளிங்கர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் பேச்சு வார்த்தை நடத்தி, சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா சேலரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 31).

    இவர் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை செய்யாறுக்கு வந்த இவர் பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

    ஆற்காடு சாலையில் ஆதிபராசக்தி கோவில் அருகே சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறியதில் அவர் கீழே விழுந்தார்.

    அப்போது எதிரில் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார் ராஜேஷ் .

    பின்னர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உறவினர் பிரபாகரன் கொடுத்த புகாரின்பே ரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விழுப்புரம் அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் லாரி மோதி பலியானார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரவி.அவரது மகன் பிரதீப் (வயது 19) இவர் விழுப்புரம் அறிஞர்அண்ணா கல்லூரியில் இயற்பியல் 2-ம்ஆண்டுபடித்து வந்தார்.இந்நிலையில்பிரதீப் விழுப்புரத்திலிருந்து மாம்பழப்பட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது காணை அழகம்மாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போ து எதிர்பாராத விதமாக பிரதீப் தனது மோட்டார் சைக்கிளை லாரி மீது மோதி சம்பவ இடத்திலே பரிதா பமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×