search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் திட்டம்"

    • ஜவுளி தொழில் துறை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
    • 17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:- பல்லடம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி உற்பத்தி தொழில் உள்ளிட்டவை பிரதானமாக உள்ளன. சரக்கு விற்பனை மட்டுமின்றி உள்ளூர் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளுக்கு தனியார் போக்குவரத்து வசதிகளை நம்பியே இருக்க வேண்டி உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை, வண்டி வாடகை உயர்வு, ஆள் கூலி உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொழில்துறையினர் மத்தியில் இது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.

    போதிய ரெயில் வசதிகள் இருந்தால் உள்நாட்டு சரக்கு போக்குவரத்துக்கு பெரிதும் உதவும். இதற்காகவே பழனி - சாம்ராஜ் நகர் ரெயில் திட்டம் கடந்த 2005ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இத்திட்டம் நிறைவேறினால் ஜவுளி தொழில் துறை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறுவர்.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவை இங்கு கொண்டு வரப்படும் போது இவற்றின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் தொழில், வேலைவாய்ப்பு பெறுவர். பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு  ரெயிலில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள், உயிரிழப்புகளும் குறையும் வாய்ப்பு உள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். எம்.பி.,க்களும் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாத நிலையில் மத்திய அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ×